அயோத்தி ராமர் கோயில் குறித்து ரஜினிகாந்த் சொன்னது என்ன? வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோயில் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின் போது பத்திரிகையாளர் ஒருவர் ரஜினியிடம் பேட்டி எடுத்தார். அப்போது ரஜினிகாந்த் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லி தனது பதிலை கூறத் தொடங்கினார். வரலாற்று சிறப்புமிக்க நாளில், வரலாற்று சிறப்புமிக்க விழாவில் நான் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

பல போராட்டங்கள் பலரது தியாகங்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் உருவாகியுள்ளது. ராமரின் ஆசிர்வாதத்தால் உலக மக்கள் அனைவரும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன் என்று கூறினார்.

இதன் பின்னர் சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது- சிறப்பான முறையில் அயோத்தியில் ராமர் கோவில் தரிசனம் நடந்துள்ளது.

ராமர் கோயில் திறந்ததும் அதனை பார்த்த முதல் 200 நபர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்த வரைக்கும் இது ஆன்மீகம் சார்ந்த நிகழ்வு என்று கூறினார். அயோத்தி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவில் ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் சகோதாரர் சத்திய நாராயணா ஆகியோருடன் பங்கேற்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *