உடல் பருமன் சட்டுனு குறையணுமா… ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

குளிர்காலத்தில், பொதுவாக உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலானதாக இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடல் உழைப்பு இல்லாமல் செய்வதும் தான்.
- வாழ்க்கை முறைகளில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், எளிதாக எடையைக் குறைக்கலாம்.
- மஞ்சள் பால் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன.
- உடற்பயிற்சி செய்ய யாருக்கும் மனமிருப்பதில்லை.
குளிர்காலத்தில், பொதுவாக உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலானதாக இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடல் உழைப்பு இல்லாமல் செய்வதும் தான். குளிர்காலத்தில், மக்கள் குளிருக்கு இதமாக, டீ-பக்கோடா, ஹல்வா மற்றும் லட்டுகளை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த சீசனில் உடற்பயிற்சி செய்ய யாருக்கும் மனமிருப்பதில்லை. நாள் முழுவதும் படுக்கையில் உட்கார்ந்து அல்லது படுத்திருந்தால், உடல் எடை அதிகரிக்கிறது. இருப்பினும், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், நீங்கள் எளிதாக எடையைக் குறைக்கலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கமாக ஆக்கிக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ குடிக்கவும்
குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க, பலர் டீ அதிகம் குடிப்பார்கள். ஆனால் இதில் உள்ள பால் மற்றும் சர்க்கரையின் காரணமாக உடல் எடை வேகமாக அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பால் சேர்த்த டீக்கு பதிலாக கிரீன் டீயைஉட்கொள்ளுங்கள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ உட்கொள்வது தொப்பையை குறைக்க உதவும்.