ஏன் நீங்க மட்டும் லேட்டா வரீங்க… கேள்வி கேட்ட ஸ்ரீபிரியாவிடம் பணம் வாங்கிய ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தபோது, வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஏன் படப்பிடிப்புப்புக்கு லேட்டா வரீங்க என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து ரூ 1000 வாங்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி போல் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதே ஆண்டு 5 படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்தார். இதில் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான 3-வது படமான பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாலு சேகர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

நடிக்க தொடங்கிய 3-வது படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கர் இந்த படத்தின் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நடிப்பை பார்த்த சின்னப்ப தேவர், ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார்.

ஒரு பட நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்த 4 பேர் பிரிந்து தனித்தனியாக படம் தயாரித்தபோது கூட அவர்கள் 4 பேரும் தயாரித்த முதல் படத்தின் நாயகன் ஜெய்சங்கர் தான். அந்த அளவிற்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெய்சங்கர் வளர்ந்தபின் அவரை கேள்வி கேட்ட அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த ஸ்ரீபிரியாவிடம் இருந்து பந்தைய தொகையாக ரூ1000 பெற்றுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *