சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் பிசினஸ் சூப்பர்.. சனியால் பெட்டி நிறைய பணத்தை அள்ளப்போவது யார்?

சென்னை: கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இந்த காலத்தில் பல ராசிக்காரர்களை புதிய தொழிலை தொடங்க வைப்பார். தொழிலில் நல்ல லாபத்தை தருவார். வெளிநாடு சென்று பிசினஸ் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தரப்போகிறார். 2024ஆம் ஆண்டில் பிசினஸ், தொழிலில் கொடி கட்டி பறக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: 2024ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிகலாமா என்று பலரும் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்கள் செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது. எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ், கடல் கடந்து சென்று பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது.
கிரகங்களால் யோகம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேது சஞ்சாரத்தை வைத்து பார்த்தால் ராசியில் குரு அமர்ந்திருப்பது யோகம். மே மாதம் மூலம் தன ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார் குரு பகவான். சனி பகவான் தனது சொந்த வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் ராகு 12ஆம் வீட்டிலும் கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பு அம்சம். உங்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல தொழில் அமையும். நீங்க தொடங்கும் தொழிலில் வெற்றிகரமானதாக லாபத்தை கொடுக்கக் கூடியதாக அமையும்.
சொந்த தொழில் யோகம்: சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ரியல் எஸ்டேட் தொழில்: தொழில் கிரகமான சனிபகவானால் உங்களுக்கு நல்ல தொழில் அமையும். வியாபாரம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். தொட்டது துலங்கும் ஆண்டு. நல்ல வேலை அதிக சம்பளத்துடன் கிடைக்கும். மன நிம்மதியை தரும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைகிறது. தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். காரணம் மேஷம் ராசியை சனி பார்வையிடுவது சிறப்பு. தேவையில்லாமல் பட்ட கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.