மம்மூட்டி நடிக்கும் டர்போ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
டர்போ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய போஸ்டரில் மம்மூட்டி காவல் நிலையத்தில் கைதி போன்று அமர்ந்து இருக்கிறார்.
மம்மூட்டி நடிக்கும் புதிய படம் “டர்போ”. வைசாக் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மிதுன் மேனுயெல் தாமஸ் எழுதியிருக்கும் டர்போ படத்தில் அஞ்சனா, ஜெயபிரகாஷ், சுனில் மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய போஸ்டரில் மம்மூட்டி காவல் நிலையத்தில் கைதி போன்று அமர்ந்து இருக்கிறார்.
டர்போ படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியின் சொந்த நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிக்கிறது.
மம்மூட்டி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான பிரம்மயுகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் இந்த படம் நான்கு நாட்களில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக குவித்தது.