மேடையில் என்னிடம் பிரேமலதா சொன்னது! பாத்ரூம் கூட தனியாக போக முடியாத நிலை – ராதாரவி பகிர்ந்த சீக்ரெட்
விஜயகாந்தின் இறுதிச்சடங்கு அவரது தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்ல படியாக நடந்து முடிந்தது. பல அரசியல் தலைவர்கள் முன்னின்று இறுதிச்சடங்கை சிறப்பாக முடித்துக் கொடுத்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் ராதாரவி பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கொடுத்த பேட்டிகளில் பெரும்பாலும் விஜயகாந்தை பார்க்க விட மாட்டிக்கிறார்கள் என்றேதான் கூறியிருக்கிறார்.
ஆனால் இன்று விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வரும் போது ராதாரவியும் வாகை சந்திரசேகரும் சேர்ந்துவந்தனர். அப்போது பிரேமலதா ராதாரவியிடம் ‘ நான் உங்களுக்கு பல முறை போன் செய்திருக்கிறேன். கேப்டனை வந்து பார்க்க சொல்ல போன் செய்திருக்கிறேன். ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள்தானே அடிக்கடி பார்க்க விடமாட்டிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் என கூறுகிறீர்கள்’ என்று மேடையிலேயே கூறினாராம்
இதை குறிப்பிட்டு பேசிய ராதாரவி அந்த அம்மா அப்படி சொன்னார்கள். அவர்களும் என்ன பண்ணுவார்கள் பாவம். கிட்டத்தட்ட 10 வருட போராட்டம். விஜி கூடவே இருந்து போராடியிருக்கிறார் என்றால் அந்த அம்மாவைத்தான் நான் பாராட்டுவேன் என்று ராதாரவி கூறினார்.
மேலும் விஜிக்கு நியாபக மறதி கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்ததாம். தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க விஜயகாந்த் வீட்டிற்கு ராதாரவி சென்றாராம். அப்போது ராதாரவியை பார்த்து யார் இது? என்று கேட்டாராம் விஜயகாந்த். உடனே ராதாரவி நீ ஓட்டுப் போடவே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.
எப்படித்தான் இப்படி ஆனான் என்றே தெரியவில்லை என்று ராதாரவி கூறினார். ஒரு சமயம் விஜயகாந்திற்கு பிரேமலதா ஷேவ் எல்லாம் செய்துவிட்டார்.அதை பார்க்கும் போது பாத்ரூம் போனால் கூட பிரேமலதாதான் எல்லாவற்றையும் செய்திருப்பார் போல் என்று தெரிகிறது.
அதாவது அவனது வேலையை கூட அவனால் செய்ய முடியாத நிலையில்தான் விஜி இருந்திருக்கிறான் என்று தெரிகிறது. உண்மையிலேயே பிரேமலதாவை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு சிறந்த பாட்னராக இருந்திருக்கிறார் என ராதாரவி கூறினார்.