லொட்டரியில் விழுந்த 1.4 மில்லியன் டொலர்! அவர் தேர்ந்தெடுத்த அதிர்ஷ்ட எண்கள் தெரியுமா?
லாட்டரியில் 1.4 மில்லியன் டொலர் பரிசை வென்ற பெண் ஒருவர், உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
Lucky Day Lotto Jackpot
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் லாட்டரி ( Illinois Lottery) நிறுவனம் நடத்திய லக்கி டே லோட்டோ ஜாக்பாட்டில் (Lucky Day Lotto jackpot) பெண் ஒருவர் 1.4 மில்லியன் டொலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
அவர் தனது குழந்தையின் பிறந்தநாள் நம்பரில் லொட்டரி டிக்கெட்டை வாங்கியது தான் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரிசுத்தொகை விழுந்த பெண் கூறுகையில், “என் குழந்தை அழுதது. அப்போது மீண்டும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து தூங்க வைக்க முயற்சி செய்தேன்.
அதே நேரத்தில் பொழுதுபோக்கிற்காக மொபைலை எடுத்து லொட்டரி ஆப்பை திறந்து பார்த்தேன். அதில் நான் 1.4 மில்லியன் டொலர்கள் வென்றதை பார்த்ததும் நம்ப முடியவில்லை” என்று ஆச்சரியமாக கூறியுள்ளார்.
அதிர்ஷ்ட எண்கள்
மேலும் அந்த பெண் தான் லொட்டரி எண்களை எப்படி தேர்வு செய்தார் என்பதையும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “நான் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டே Lucky Day Lotto jackpot -யை விளையாடினேன்.
அப்போது என்னுடைய குழந்தையின் பிறந்தநாள் நம்பரை அதிர்ஷ்ட எண்களாகப் பயன்படுத்தினேன்” என்றார். அவர் 6, 8, 16, 17 மற்றும் 20 ஆகிய எண்களை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் அவர், “உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எந்த குழந்தையின் பிறந்தநாளை லாட்டரி எண்ணாகத் தேர்வு செய்யலாம் என்று கணவரிடம் கேட்ட போது அவர் கேலி செய்தார்” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், குழந்தையின் பிறந்தநாள் மூலம் லொட்டரி பரிசு கிடைத்துள்ளதால் அவருக்கு லக்கி மாம் என்ற பெயரும் கிடைத்துள்ளது.