தொடர்ந்து 1 மாதம் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Drumstick Leaves Water Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி நல்ல சத்தான உணவுப் பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது தான்.
வெறும் வயிற்றில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சும்.
அப்படி ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் தான் முருங்கைக்கீரை. பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் இந்த முருங்கைக்கீரையானது அதன் மருத்துவ குணங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முருங்கைக்கீரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் முருங்கைக்கீரை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலினுள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக உடல் எடை, இரத்த சர்க்கரை போன்றவற்றைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. இப்போது முருங்கைக்கீரை நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் என்னென்ன அற்புதங்கள் உடலில் நிகழும் என்பதைக் காண்போம்.
உடல் சுத்தமாகும்
உங்கள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை தினந்தோறும் வெளியேற்றிவிட்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி உடலில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் திறன் முருங்கைக்கீரை நீருக்கு உள்ளது. அதற்கு ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சருமமும், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்
உங்கள் உடலின் மெட்டபாலிசம் நாள் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு முருங்கைக்கீரை நீர் உதவி புரியும். ஆய்வு ஒன்றில் கூட, முருங்கைக்கீரை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுவது தெரிய வந்துள்ளது. அதுவும் முருங்கைக்கீரை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.
எடை இழப்பை ஊக்குவிக்கும்
நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நீண்ட நாட்களாக முயற்சித்தும், எந்த பலனும் தெரியவில்லையா? அப்படியானால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரைக் குடித்து வாருங்கள். இதனால் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஒருவரது உடலில் மெட்டபாலிசம் சிறப்பான அளவில் இருந்தால், உடல் எடையைக் குறைக்க அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை.