ஆண்டுக்கு ஒரு கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும்… மத்திய அமைச்சர் கணிப்பு!

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு கோடியை எட்டிவிடும் என்றும், இதன் மூலமாக 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இந்தியா உருவெடுப்பதற்கான அனைத்து திறன்களும் நம்மிடம் உள்ளன. இந்த மாசற்ற எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் போக்குவரத்து சார்ந்த உற்பத்தி துறையில் தன்னிறைவு கொண்ட பகுதியாக இந்தியா உருவெடுப்பதற்கான அனைத்து வித முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது மாசுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார்களை முழுமையான எலெக்ட்ரிக் காராக அல்லது எலெக்ட்ரிக் மற்றும் பிற எரிபொருளில் இயங்கக் கூடிய ஹைபிரிட் வாகனமாக மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தொழில்நுட்பங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
எலெக்ட்ரிக் வாகன வர்த்தக கண்காட்சி 2023 என்ற நிகழ்ச்சியில் அவர் இதுகுறித்து பேசும்போது “வாஹன் தளத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஏற்கனவே 34.54 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: