ரூ.1 கோடி சம்பளம்.. 85 மாணவர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..!

ஆண்டுதோறும் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி-ஐஐடி, இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட்- ஐஐஎம், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் சயின்ஸ்- ஐஐஎஸ்சி போன்ற பாரம்பரிய மிக்க கல்வி நிறுவனங்களில் நாட்டின் பிரபல நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வந்து அந்தக் கல்வியாண்டு முடிவுக்குள்ளேயே கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்தி சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுப்பது வாடிக்கை.
இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இப்போது நாடு முழுவதும் உள்ள ஐடி, டெக்னாலஜி, இஞ்சினியரிங் கல்லூரிகளிலும் இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கின்றது. தனியார் பொறியியல், ஐடி கல்லூரிகளும் இதுபோன்ற இண்டர்வியூக்களுக்கு ஏற்பாடு செய்து தங்களது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன. ஐஐடி, ஐஐஎம் கிளைகளில் தனித்தனியாக இதுபோன்ற கேம்பஸ் இண்டர்வியூக்கள் நடைபெறும்.இந்த நிலையில் இந்தாண்டு ஐஐடி பாம்பே கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் 85 பேருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கிடைத்துள்ளது ஆச்சரியத்தையும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.ஐஐடி பாம்பே கேம்பஸ் இண்டர்வியூவில் 63 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும், 85 மாணவர்களுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை ஆஃபர்களும் கிடைத்துள்ளன.இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் அக்சென்சர், ஏர்பஸ், ஏர் இந்தியா, ஆப்பிள், ஆர்தர் டி.லிட்டில், பஜாஜ், பார்க்லேஸ், கொஹிசிட்டி, டா வின்ஸி, டிஹெஎல், ஃபுல்லர்டன், ஃபியூச்சர் பர்ஸ்ட், ஜிஇ-ஐடிசி, குளோபல் எனர்ஜி அண்டு என்விரான், குகூள் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.இஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஐடி மற்றும் சாப்ட்வேர், பைனான்ஸ்/ பேங்கிங் / பின்டெக், மேனேஜ்மெண்ட் கன்சல்டிங், டேட்டா சயின்ஸ் அண்டு அனலிடிக்ஸ், ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட், டிசைன் ஆகிய துறைகளில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜப்பான், தைவான், தென்கொரியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் வேலைபார்ப்பதற்கு 63 பேர் தேர்வாகினர். ரூ.1 கோடியைக் காட்டிலும் அதிக சிடிசியில் 85 பேர் தேர்வாகினர்.2023-24இன் முதற்கட்ட வேலை நியமனத்தில் 388 உள்நாட்டு தனியார் நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன. இதில் பல நிறுவனங்கள் ப்ரீ பிளேஸ்மென்ட் ஆர்டர்களை தந்தன.இந்த முதற்கட்ட தேர்வில் நிறுவனங்கள் மாணவர்களை நேரடியாக சந்தித்தும், ஆன்லைனில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலமாகவும் இன்டர்வியூவை நடத்தி தேர்வு செய்தன.2023 டிசம்பர் 20 ஆம் தேதி வரை 1,340 பேருக்கு வேலைக்கான ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,188 மாணவர்களுக்கு வேலையில் சேர்ந்தனர். திருப்தியில்லாத சம்பள பேக்கேஜ் போன்ற காரணங்களால் இதில் பலர் தங்களுக்கு கிடைத்த வேலை ஆஃபர்களை நிராகரித்தனர்.