10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ. 14 லட்சம் என உயர்த்திய மல்டிபேக்கர் பங்கு..!

ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் (Stylam Industries,) நிறுவனம் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனிங் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த 10 ஆண்டுகளில் 14,000% உயர்ந்துள்ளது. அதாவது எக்கனாமிக் டைம்ஸ் மார்க்கெட்டின் ஆய்வின்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது ரூ.14 லட்சம் என உயர்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டெக்கரேட்டிவ் லேமினேஷன் மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய லேமினேட் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது .கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கோலோச்சி வருகிறது இந்த நிறுவனம் கோட்டிங்கில் புதிய முறையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிறுவனத்தின் 54.61% பங்குகளை புரமோட்டர்கள் வைத்துள்ளனர். 45.39% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களிடம் உள்ளது. இதில் 4% மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடமும், 3.35% வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன.

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8.3% குறைந்துவிட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் இந்த பங்கு கடுமையான வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக இரண்டே மாதங்களில் இந்த பங்கின் மதிப்பு 170% சரிந்தது. கடந்த மூன்று மாத அளவில் பார்த்தால் பங்கின் மதிப்பு 225% வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொழில் நுட்ப அடிப்படையில் பார்க்கும்போது இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் அதற்கு முன்பு ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு ரூ.1970 என்ற நிலையை எட்டியது. மீடியம் – டெர்ம் அடிப்படையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என சிஜிஎல் தரகு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 52 வார கால குறைந்தபட்ச பங்கு மதிப்பு ரூ.941.70 ஆகும், 52 வார கால உயர்ந்த பட்ச பங்கு மதிப்பு ரூ.1979.95 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு ரூ.1531 என்ற அளவில் வர்த்தகம் ஆகின்றன. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,595 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் புக் வேல்யூ 278.26 ஆகவும், முகமதிப்பு 5 என்ற நிலையிலும் உள்ளது.

2022 ஆம் ஆண்டு ரூ.61 கோடியாக இருந்த நிறுவனத்தின் லாபம் 2023ஆம் ஆண்டு ரூ.96 கோடியாக உயர்ந்தது. அதேபோல நிறுவனத்தின் நிகர மதிப்பு 2022இல் ரூ. 312 என இருந்து 2023ஆம் ஆண்டில் ரூ. 412 கோடி என உயர்வு கண்டுள்ளது.1991 ஆம் ஆண்டு ஜெகதீஷ் குப்தா என்பவரால் ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *