ஒரே இரவில் முகத்தை பளபளக்க செய்ய 10 பாதாம் போதும்…!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
ஒவ்வொருவரும் தங்களது அழகை மேம்படுத்துவதற்காக பல விடயங்களை முயற்சித்து பார்ப்பது வழக்கம்.
என்னதான் சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தாலும் இயற்கையினால் கிடைக்கும் பலனுக்கு ஒரு மதிப்பு இருக்க தான் செய்யும்.
காரணம், சந்தையில் வாங்கி பயன்படுத்தப்படும் பொருட்களானது நிரந்த தீர்வை வழங்காது. அதுவே இயற்கை முறையில் பயன்படுத்தினால் உடனடி தீர்வும் பெறலாம் வாழ்நாள் முழுவதும் அதை சருமத்திற்கு உபயோகிக்கலாம்.
அந்தவகையில் பாதாம் வைத்து முகத்தை எப்படி பளிச்சிட செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாதாம் பேஸ் பேக்
முதலில் 10 பாதாம் பருப்புக்களை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும்.
அடுத்த நாள் கலையில் ஊற வைத்த பாதாமின் தோலை உரித்து எடுத்து பால் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து எடுத்தால் இயற்கையான பாதாம் பேஸ் பேக் தயார்.
எப்படி பயன்படுத்தலாம்?
இதை கழுத்து,முகம் மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
பின் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுக்கலாம்.
இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும் ஒரே இரவில் முகத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
பயன்படுத்தும் உங்களுடைய சருமமானது எண்ணெய் நிறைந்த சருமமாக இருந்தால் தயார் செய்த பாதாம் கலவையுடன் மஞ்சள் பொடி, ரோஸ் வாட்டார், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தேய்க்கவும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கலாம். மற்றும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கலாம்.
பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பண்புகள் நிறைந்துள்ளதால் அது வயதான தோற்றத்தை குறைக்க உதவும். இனி உங்களது சருமமானது இயற்கையான முறையிலேயே பளபளக்கும்.