மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் 10 வங்கிகள்

மூத்த குடிமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான சேமிப்பு திட்டம் என்பது பிக்சட் டெபாசிட்களாகும். இதன் மூலம் அவர்களது அவசரகாலத் தேவைகளுக்குப் பயன்படும்.
பிக்சட் டெபாசிட்கள் பணப்புழக்கத்தை வழங்குவதோடு வழக்கமான வட்டி வருமானத்தையும் வழங்குகிறது. பிக்சட் டெபாசிட்கள் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும். தற்போது, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்றாண்டுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன.
மூன்று வருட பிக்சட் டெபாசிட்களுக்கு கவர்ச்சிகரமான வட்டியை வழங்கும் முதல் பத்து வங்கிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டியைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடா : மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7.75%, மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1.26 லட்சமாக வளரும்.
ஆக்சிஸ் வங்கி: மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7.60%, மூன்றாண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.25 லட்சமாக உயரும்.
எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி-
மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7.50%, மூன்றாண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.25 லட்சமாக உயரும்.
கனரா வங்கி: மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7.30%, மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1.24 லட்சமாக வளரும்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா: மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7.25%, மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1.24 லட்சமாக வளரும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 7%, மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1.23 லட்சமாக வளரும்.
இந்தியன் வங்கி: மூத்த குடிமக்களுக்கான மூன்று வருட பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 6.75%, மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1.22 லட்சமாக உயரும்.