இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!
சர்வதேச ஓட்டுநர் அனுமதி இல்லாமல், இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் வாகனங்களை ஓட்டுவதற்கு பல நாடுகள் அனுமதிக்கின்றன.
அத்தகைய நாடுகளில் முக்கியமான 10 நாடுகளின் பட்டியல் உங்களுக்காக…
1. அமெரிக்கா (USA)
அமெரிக்க சாலைகளில் இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதிக்கிறது. ஓட்டுநர் உரிமம் நாட்டிற்குள் நுழைந்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
ஆனால், ஓட்டுநர் உரிமம் இந்தியாவின் எந்த பிராந்திய மொழியிலும் இருக்கக்கூடாது, அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
மேலும், அமெரிக்காவுக்குள் அவர்கள் சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான சான்றாகச் செயல்படும் attested I-94 form-யும் பயணி எடுத்துச் செல்ல வேண்டும்.
2. அவுஸ்திரேலியா (Australia)
நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தவும் அவுஸ்திரேலிய அரசு அனுமதிக்கிறது.
வடக்கு அவுஸ்திரேலியாவிற்கு, உரிமம் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். வடக்கு அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும்போது இந்தியாவில் இருந்து சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டை எடுத்துச் செல்வது நல்லது.
இந்தியாவைப் போலவே, அவுஸ்திரேலியாவிலும் கார்கள் இடது பக்கத்தில் இயக்கப்படுகின்றன.
3. கனடா (Canada)
கனடாவில் இந்திய குடிமக்கள் 60 நாட்கள் வரை இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது. அதன் பிறகு நீங்கள் அந்நாட்டில் தொடர்ந்து வாகனம் ஓட்ட விரும்பினால் அதற்கு தனி அனுமதி பெற வேண்டும்.
4. பிரித்தானியா (UK)
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இந்திய ஓட்டுநர் உரிமம் இங்கிலாந்தில் நுழைந்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் உட்பட ஒரு குறிப்பிட்ட வகை வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். உ
ரிமமும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், மேலும் அங்கு சாலையின் இடது பக்கத்தில் ஓட்ட வேண்டும்.
5. நியூசிலாந்து (New Zealand)
ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த நியூசிலாந்து அரசு அனுமதிக்கிறது, அதைத் தாண்டி ஒரு NZ ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவைப்படும்.
இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் நியூசிலாந்தில் வாகனம் ஓட்டுவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும்.
மேலும் உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அது இல்லையென்றால், நியூசிலாந்து போக்குவரத்து ஏஜென்சியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நகலைப் பெறலாம்.
6. சுவிட்சர்லாந்து (Switzerland)
சுவிட்சர்லாந்திலும் இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.
உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், மேலும் உரிமத்தால் அனுமதிக்கப்பட்ட எந்த வாகனத்தையும் ஒருவர் குத்தகைக்கு எடுக்கலாம். சாலையின் வலதுபுறத்தில் கார்களை ஓட்ட வேண்டும்.
7. ஜேர்மனி (Germany)
ஜேர்மனி இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது, ஆனால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே.
உரிமம் ஆங்கிலம் அல்லது ஜேர்மன் மொழியில் இருக்க வேண்டும். அது இல்லையென்றால், ஒருவர் அதை பொலிஸ் அதிகாரிகள் அல்லது அதற்கான ஏஜென்சிகள் மூலம் மொழிபெயர்க்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி அல்லது ஜேர்மன் ஓட்டுநர் உரிமம் தேவைப்படும். ஜேர்மனியிலும், வாகனங்களை சாலையின் வலது புறத்தில் ஓட்டவேண்டும்.
8. பிரான்ஸ் (France)
பிரான்சில், இந்திய ஓட்டுநர் உரிமம் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும், இருப்பினும், ஒருவர் அதை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்.
மேலும், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, பிரான்சிலும் கார்கள் இடது புறத்தில் ஸ்டீயரிங் வைத்திருக்கின்றன, மேலும் கார்கள் சாலையின் வலது பக்கத்தில் இயக்கப்படுகின்றன.
9. தென்னாப்பிரிக்கா (South Africa)
இந்திய ஓட்டுநர் உரிமம் தென்னாப்பிரிக்காவில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
மேலும் அந்நாட்டில் கார் அல்லது மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுக்க சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவைப்படலாம்.
10. ஸ்வீடன் (Sweden)
ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஸ்வீடனின் அழகிய சாலைகளில் ஓட்டி மகிழலாம்.
ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது ஸ்வீடன், ஜேர்மன், பிரஞ்சு, டேனிஷ் மற்றும் நார்வேஜியன் உள்ளிட்ட ஸ்வீடனால் அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகளில் இருக்க வேண்டும்.
மேலும், அடையாளச் சான்று மற்றும் புகைப்படங்கள் போன்ற பிற ஆவணங்களையும் ஒருவர் கையில் வைத்திருக்க வேண்டும்.