இந்தியாவில் அதிகம் ஊதியம் தரும் 10 வேலைகள்
இன்றைய சூழலில் சிக்கலான வேலைவாய்ப்பு மார்க்கெட்டில் நம் விருப்பத்துக்கு ஏற்ற, அதேவேளையில் கைநிறைய சம்பளம் தரும் வேலையைக் கண்டுபிடிப்பது மாணவர்களுக்கு படு திண்டாட்டமாக இருக்கிறது.
அதிக ஊதியம் தரும் வேலைகள், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், அவர்களின் இலக்குகளை அடையவும் உந்துதலாக அமைகின்றது. இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் கணிசமாக வேறுபடலாம்.
அனுபவம், கல்வித் தகுதிகள், அதிக சம்பளம் வழங்கும் பெருநகரங்களில் பணியிடம், பிரபல நிறுவனங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. இருந்தாலும் இந்தியாவில் தொடர்ந்து அதிக சம்பளத்தை வழங்கும் சில தொழில்கள் உள்ளன.
நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்கு பெரும்பாலும் மேம்பட்ட கல்வி, சிறப்புத் திறன்கள், பல வருட அனுபவத்தின் கலவை தேவைப்படுகிறது. இந்தியாவில் பொதுவாக அதிக சம்பளம் வழங்கும் சில தொழில்கள்:
மருத்துவ நிபுணர்கள்: நிபுணத்துவம், அனுபவம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 2 கோடி அல்லது அதற்கு மேல்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி நிபுணர்கள்(மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ்): அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல்.
மேனேஜ்மென்ட் நிபுணர்கள் (அனுபவம் வாய்ந்த மேலாளர்கள்): அனுபவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல்.
முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள்: மூத்த பதவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல்.
டேட்டா சயின்டிஸ்ட்டுகள் மற்றும் ஆய்வாளர்கள்: அனுபவம் மற்றும் திறன்களைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல்.
இன்ஜினியர்கள் (பல்வேறு நிபுணத்துவம்): பொறியியல் துறை, அனுபவம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் அல்லது அதற்கு மேல்.
சட்ட வல்லுநர்கள் (அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள்): அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல்
விமான பைலட்கள்: அனுபவம் மற்றும் பறக்கும் வகையைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல்.
வணிக ஆலோசகர்கள்: மூத்த ஆலோசனைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல்.
சார்ட்டர்டு அக்கவுன்டன்டுகள்: அனுபவம் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல்