பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி! 1000 வீடுகள் எரிந்து சேதம் – அவசரநிலை பிரகடனம்

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கர காட்டுத்தீ
சிலியின் மத்திய Valparaiso பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 480 ஹெக்டேர் பரப்பளவை சூழ்ந்துள்ளது.

இதுவரை இந்த காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவசரநிலை பிரகடனம்
Vina del Mar மற்றும் Valparaiso சுற்றுலாப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இந்த காட்டுத்தீ அழித்துள்ளது.

கடற்கரை நகரங்களை சாம்பல் புகை அடர்ந்த மூடுபனியால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலி ஜனாதிபதி Gabriel Boric, தீயை எதிர்த்துப் போராடுவதற்கும், பேரழிவு காரணமாகவும் அவசரநிலை பிரகடனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *