ஆண்களின் காதல் மொழிகளை புரிந்து கொள்ள பெண்களுக்கான 10 அறிகுறிகள்
பெண்கள் தங்களுக்கு நெருக்கமான ஆண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள் என்றால், அதனை எப்படி அடையாளம் காணலாம் என்பதை புரிந்து கொள்ள சில சிக்னல்கள் இருக்கின்றன. தோழமையாக இருப்பவர்கள் வெளிப்படையாக இருந்தாலும், உங்களுக்கு இருவருக்கும் இடையிலான உணர்வை நேரடியாக வெளிக்காட்டமாட்டார்கள். மாறாக, அவர்களின் செயல்பாடுகள் அந்த உணர்வை வெளிப்படுத்துபவையாக இருக்கும். இது கொஞ்சம் சுத்தி வளைத்து புரிந்து கொள்ளக்கூடிய வழி என்றாலும், பிடித்தமானவர்கள் என்பதால் இந்த வழிமுறைகளில் உங்களுக்கு ஒரு அலாதியான இன்பம் கிடைக்கும்.
சுத்தி வளைத்து பேசுவதெல்லாம் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் ஒரே நாளில் நேரடியாக கேட்டு சஸ்பென்ஸை உடைத்துக் கொள்ளலாம். அதில் சுவாரஸ்யம் எல்லாம் இருக்காது என்றாலும் உங்களின் உறவில் அடுத்தக்கட்டத்துக்கு சீக்கிரம் செல்ல இது அணுகுமுறை உதவியாக இருக்கும். இருப்பினும் நேரடியாக கேட்க தயக்கம் காட்டுவீர்கள் என்றால், நெருக்கிய நட்பில் இருக்கும் ஆண்களில் இந்த செயல்களை எல்லாம் கவனியுங்கள். அது அவரின் உணர்வை உங்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிவித்துவிடும்.
ஆண்களின் காதல் மொழிகளை உணர்த்தும் 10 அறிகுறிகள்:
புகழ்ச்சி
அவர் அடிக்கடி உங்கள் தோற்றத்தைப் பாராட்டுவார். உங்கள் தோற்றத்தில் சிறிய மாற்றங்களைகூட கவனித்துவிடுவார். உங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.
கண் ஜாடை
எதுவாக இருந்தாலும் கண்களிலேயே உணர்த்திவிடுவார். உங்களுக்கு வரும் சிக்னல்கள் வார்த்தைகளால் அன்றி கண் ஜாடைகளாகவே பெரும்பாலும் இருக்கும். இது உங்கள் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பை காட்டுவதாகும்.
உடல் மொழி
அவர் உங்கள் மீது சாய்வார். சாதாரணமாக உங்களைத் தொட்டு பேசுவார். உங்களின் உடல் மொழியை அடிக்கடி பிரதிபலிப்பது போல் செய்து காட்டுவார்.
கூர்ந்து கவனித்தல்
நீங்கள் சொல்வதை கூர்ந்து கவனிப்பார். அவரின் கண்களை உங்களை உருத்திக் கொண்டே இருக்கும். உரையாடல்கள் அனைத்தும் நினைவில் இருக்கும். அறிவார்ந்த விஷயங்களில் உங்களை வியப்பில் ஆழ்த்துவார்.
கேலிப் பேச்சுகள்
உங்களிடம் மட்டுமே கேலிப் பேச்சுகள் அதிகம் இருக்கும். கிண்டல் கணக்கில்லாமல் இருக்கும் என்றாலும் அது உங்களை சிரிக்க வைக்கும், சிணுங்க வைக்கும். சிரிப்பு, கண் சிமிட்டுதல் போன்றவை இயல்பாக நடந்து கொண்டே இருக்கும்.
பாதுகாப்பில் கவனம்
உங்கள் பாதுகாப்பு மீது அவருக்கு அதீத கவனம் இருக்கும். சாலையில் செல்லும்போது உங்களை ஓரமாக நடக்க வைப்பது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை எல்லா இடத்திலும் உறுதி செய்வது, உங்களுக்கு உதவி செய்ய முன் வருவது எல்லாம் இருக்கும்.
பொறாமை
செல்ல பொறாமையை நீங்கள் அவரிடம் காண முடியும். நீங்கள் அவரிடம் நேரம் செலவிடாமல் இருக்கும் சமயங்களில் கோபத்தை வெளிக்காட்ட வாய்ப்பு இருக்கிறது.
தகவல் தொடர்பு
உங்கள் இருவருக்குமான தகவல் தொடர்பு என்பது விரிந்து கொண்டே செல்லும். தொலைபேசி, சமூக ஊடகங்கள் என எல்லா தளங்களிலும் பேசிக் கொண்டே இருப்பீர்கள்.
கூடுதல் பயணம்
இருவரும் அடிக்கடி இயல்பாக பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். அந்த பயணம் குறிப்பிட்ட இடத்தை நோக்கியதாகவோ அல்லது திட்டமிடாத பயணமாகவோ இருக்கும். அது உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
இருவருக்குமான பாசம்
கைகளைப் பிடிப்பது, கட்டிப்பிடிப்பது அல்லது அரவணைப்பது போன்ற உடல் தொடுதலுக்கான வாய்ப்புகளை அவர் தேடுவார். அவர் வாய்மொழி பாராட்டுக்கள், இனிமையான சைகைகள் அல்லது காதல் ஆச்சரியங்கள் மூலம் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
இவையெல்லாம் ஆச்சரியங்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த சமிக்கைகள் யாரிடம் தெரிந்தாலும் அவர் உங்கள் மீது ஈர்ப்பாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.