அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு..!

த்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உலக இந்து அறக்கட்டளையின் தலைவர் சுவாமி விக்யானானந்த் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, மெலாரஸ், கனடா, கொலம்பியா, டென்மார்க், எகிப்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, மியான்மர், நியூசிலாந்து, அமெரிக்க, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *