100008 வடை மாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்….. பக்தர்கள் நீ….ண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்… !

ன்று ஜனவரி 11 வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனுமன் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடும் வகையில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளை கொண்டு மாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என அழைக்கின்றனர். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் பிறந்ததினமே அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் பெறலாம். இதனால் இதுவரை வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கி நம்மை நன்மைகள் தேடி வரும் என்பது ஐதிகம். அனுமனுக்கு துளசி மாலை சாற்றி பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் இவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

வீட்டு பூஜை அறையிலும் அனுமனுக்கு பூஜை செய்யலாம். அந்த நேரத்தில் அனுமன் துதிகள், ஸ்லோகங்கள், அனுமன் சாலீசா சொல்லலாம். அதன் பிறகு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை இவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். அத்துடன் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி மனமுருகி பிரார்த்தனை செய்திட விரைவில் சுபகாரியம் கைகூடும். அத்துடன் அனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை கட்டிப் போட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். பூலோகத்தில் பிறப்பெடுத்த அனைவருமே ஏதோ ஒரு நாளில் இறப்பினை சந்திக்க வேண்டும். அப்படி இறப்பில்லாத வாழ்வு பெற்றவர்கள் ஏழு பேர். அவர்கள் சிரஞ்சீவிகள் . இதில் அண்ணனே ஆனாலும் எதிர்த்து நியாயத்தின் பக்கம் நின்ற விபீஷணன், பெருமாளே ஆனாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மகாபலி, எமனை வென்ற மார்க்கண்டேயன், காவியங்களை படைத்த வியாசர், தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்ற பரசுராமர்,

கடைசி வரை கௌரவர்கள் பக்கமே நின்று போரிட்ட அஸ்வத்தாமன் இந்த வரிசையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் சிரஞ்சீவி பட்டியலில் இடமுண்டு. ராவணனை அழிக்க ராமனாக அவதரித்த மகாவிஷ்ணுவுக்கு உதவிபுரிய சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயுதேவன் மூலம் அஞ்சனையில் வயிற்றில் உதிக்கச் செய்தார். அவர் தான் வாயுபுத்திரன் அனுமன் என்ற ஆஞ்சநேயர். சீதையால் ‘சிரஞ்சீவியாக இரு’ என்று ஆசீர்வதிக்கப்பட்டவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *