அடுத்த 5 ஆண்டில் லாபத்தை அள்ளித்தரும் 11 பங்குகள்.. ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரை..!
ஒவ்வொரு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் நீண்ட கால அடிப்படையில் நிலையான லாபத்தைக் கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு போர்ட்போலியோ-வை கண்டுபிடிப்பதில் தான் முயற்சி செய்கின்றனர். இது மட்டும் செட்டாகி விட்டால் தொடர்ந்து லாபத்தை அள்ள முடியும் என்பது தான் இதன் திட்டம்.
இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15-20% கலவையான வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) லாபத்தை வழங்கும் பங்குகள் என சுமார் 11 பங்குகளை பிரபல அமெரிக்க முதலீட்டு வங்கியியல் நிறுவனமான ஜெப்ரீஸ் குரூப் பட்டியலிட்டு உள்ளது.
ஜெப்ரீஸ் பட்டியலில் அம்பர் என்டர்ப்ரைசஸ் இந்தியா லிமிடெட்., அம்புஜா சிமெண்ட் லிமிடெட்., ஆக்சிஸ் வங்கி லிமிடெட்., ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான முதலீட்டுத் தேர்வுகளில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 10-20 ஆண்டுகளில் இந்திய சந்தையில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு நிலையாக 10-12% அமெரிக்க டாலர் CAGR வளர்ச்சி வரலாற்றைக் கொண்ட இந்திய சந்தை தற்போது ஐந்தாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உள்ளது.
மேலும் இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் சீர்திருத்தங்கள் இந்தியாவின் ‘மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம்’ என்ற அந்தஸ்தை நிலைநிறுத்தும் என்று ஜெப்ரீஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி (GDP) $5 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுகிறது. இந்த தொடர் சீர்திருத்தங்கள் 7% நீண்ட கால GDP வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கிறது என்றும் ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் நிலையான மற்றும் வேகமாக வளரும் பணப்புழக்கம், இந்திய பங்குச் சந்தை செயல்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை (FPI) ஈர்க்கும் என்று ஜெஃப்ரீஸ் தனது மார்ச் 18 ஆம் தேதியான குறிப்பில் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் 11 முதன்மை நிறுவனங்களின் பட்டியலை முதலீட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஜெஃப்ரீஸ் வெளியிட்டுள்ளது.
அம்பர் என்டர்ப்ரைசஸ்: குளிர்சாதனப் பெட்டிகள் (ACs) உற்பத்தியில் கலக்கும் இந்நிறுவனம், அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பில் உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசின் PLI திட்டத்தின் ஆதரவுடன், அடுத்த 5 ஆண்டுகளில் (FY24–30) 36% க்கும் அதிகமான வருமான (CAGR) வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். இது இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பயனாளியாகும்.
அம்புஜா சிமெண்ட்: இந்தியாவில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகள் அதிகரிப்பால் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அம்புஜா சிமெண்ட் தனது உற்பத்தி திறனைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக அதிகரிப்பதன் மூலம், செலவுகளைக் குறைத்து, பசுமை மின்சாரத்தில் முதலீடு செய்வது மூலம் 19% Ebitda CAGR வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.
ஆக்சிஸ் வங்கி: கடன் வழங்குதல் 17% மற்றும் ஈபிஎஸ் 18% என அடுத்த 5 ஆண்டுகளில் (FY24–29) வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு வைப்பு நிதி சார்ந்த மேம்பாடுகள், டிஜிட்டல் மற்றும் கடன் வழங்கும் தளங்கள் விரிவடைதல், துணை நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கும்.
பார்தி ஏர்டெல்: வலுவான Ebitda வளர்ச்சி 13% CAGR மற்றும் சராசரி வாடிக்கையாளர் வருமானம் (ARPUs) நாட்டின் GDP வளர்ச்சியை விட வேகமாக உயர்வு போன்ற காரணங்களால், அடுத்த 5 ஆண்டுகளில் (FY24-30) பார்தி ஏர்டெல்லின் ஈக்விட்டி ஃப்ரீ கேஷ் ஃப்ளோ (free cash flow to equity) 21% CAGR வளர்ச்சியடையும், நிறுவனத்தின் ROCE 25% க்கு மேல் உயரும் என ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.
JSW எனர்ஜி: அடுத்த 5 ஆண்டுகளில் (FY30) மின்சார உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்து 200 கிலோவாட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பு 50 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயரும். இதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Larsen & Toubro (L&T): இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான ஒப்பந்த நிறுவனமான L&T, அடுத்த 5 ஆண்டுகளில் (FY23-30) 15% வருவாய் வளர்ச்சியை (CAGR) எதிர்பார்க்கிறது. இதற்குக் காரணமாக, இந்தியாவில் மூலதனச் செலவினங்கள் (capex) அதிகரிப்பு.
Macrotech Developers: இந்திய வீட்டுக் கட்டுமானம் மற்றும் விற்பனை துறையில் வலுவான வளர்ச்சி காரணமாக, அடுத்த 5 ஆண்டுகளில் (CAGR) 17.5% pre-sales வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், மும்பையில் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாகப் பெரிய டவுன்ஷிப் நிலங்களின் விலையில் 10% க்கும் அதிகமான விலை உயர்வு (CAFR) ஏற்படும். இது நிறுவனத்தின் மதிப்பீட்டை மேம்படுத்தி பங்கு மதிப்பு 150% க்கும் அதிகமான உயர்வுக்கு வழிவகுக்கும்.
Max Healthcare: தரமான தனியார் மருத்துவமனைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் Max நிறுவனத்தின் படுக்கை எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் 17% வருவாய் மற்றும் 20% Ebitda வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): வங்கியின் சில்லறை, சிறு மற்றும் குறு நிறுவன (SME) மற்றும் கார்ப்பரேட் கடன் வழங்கல் 13% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVS Motors: இருசக்கர வாகனத் துறையில் மீண்டு வரும் தேவை மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான (e2W) மாற்றம் ஆகியவற்றின் வாயிலாக TVS நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் 125 சிசி இருசக்கர வாகன விற்பனை மற்றும் 265 EPS வளர்ச்சியை (CAGR) எதிர்பார்க்கிறது.
Zomato: உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் (quick commerce) துறை சேவைகள் இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டுமே வளர்ந்து வரும் வேளையில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக, Zomato நிறுவனம் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 5 ஆண்டுகளில் (FY24-30) Zomato நிறுவனத்தின் லாபம் 20 மடங்கு அதிகரிக்கும் என ஜெஃப்ரீஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதன் காரணமாக, Zomato பங்கின் இலக்கு விலையை ரூ.400 என நிர்ணயித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு 150% க்கும் அதிகமான லாபத்தை வழங்கும்.