5 ஆண்டுகளில் 1150% லாபம் தந்த ரயில்வே நிறுவன பங்கு…

ரயில்வே துறை சார்ந்த பங்குகள் முதலீட்டாளர்கள் பல மடங்கு லாபம் தந்துள்ளது. அந்த வகையில் 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 1150% லாபம் தந்த ரயில்வே நிறுவன பங்கு குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. அப்போது ஒரு பங்கின் மதிப்பானது 17 ரூபாய் முதல் 19 ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த பங்கானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்றைய தேதியில் இரண்டு பங்குச்சந்தைகளிலும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பங்கின் விலையானது 19 ரூபாய் என்ற விலையில் இருந்தது.

பட்டியலிடப்பட்ட அன்றே இந்த பங்கினை விற்காமல் 5 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் பெரிய லாபத்தை ஈட்டியுள்ளனர். 5 ஆண்டுகளில் ரயில் விகாஸ் பங்கின் மதிப்பானது 1,150% அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டின் ஒரு பங்கின் விலையானது 246 ரூபாய் என்ற அளவில் முடிந்தது.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பங்கு ஓராண்டு காலத்தில் மட்டும் 293.51% லாபம் தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 51,250 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் 2023ஆம் ஆண்டு 21,278 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. லாபம் என பார்த்தால் 2023இல் இந்நிறுவனம் 1,421 கோடி லாபம் பெற்றுள்ளது.

பங்கு மதிப்பின் வரலாற்றை கணக்கில் கொண்டு பார்த்தால், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 12.50 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கும்.

முதலீட்டாளர் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது தற்போது 1.35 லட்சம் ரூபாய் என மாறி இருக்கும். அதே போல 6 மாதத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தற்போது 1.50 லட்சம் என அதனை திரும்ப பெற்றுள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கு 4 லட்சம் ரூபாய் என லாபம் அடைந்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *