தந்தை உட்பட 12 பேர்கள்… மத்திய கிழக்கு நாடு ஒன்றில் நபர் ஒருவரின் வெறிச்செயல்

ஈரானில் 30 வயது நபர் ஒருவர் சொந்த தந்தை மற்றும் சகோதரர் உட்பட குடும்பத்தினர் 12 பேர்களை துப்பாக்கியால் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக மிக அரிதான சம்பவம்
தொடர்புடைய சம்பவம் ஈரான் போன்ற ஒரு நாட்டை பொறுத்தமட்டில் மிக மிக அரிதான சம்பவம் என்றே கூறப்படுகிறது. அந்த நபர் Kalashnikov துப்பாக்கியை பயன்படுத்தி இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த நபரின் அடையாளம் தொடர்பில் எதுவும் வெளியிடப்படவில்லை. குடும்ப தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அது தொடர்பில் விரிவான பின்னணி எதுவும் வெளியாகவில்லை. ஐரோப்பியா, அமெரிக்க நாடுகள் போன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஈரானில் மிக மிக அரிதானது என்றே கூறப்படுகிறது.
வேட்டை துப்பாக்கிகள்
மட்டுமின்றி, வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கிகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஈரானில் உள்ள ஒரு அரசு நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் ஆத்திரத்தில் மூவரை சுட்டுக் கொன்றதுடன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் ஐந்து பேர் காயங்களுடன் தப்பினர். அதன் பின்னர், தற்போது தான், ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 12 பேர்கள் பலியான சம்பவம் வெளியாகியுள்ளது.