கோர தீவிபத்தில் 1200 வீடுகள் எரிந்து நாசம்… 7000 பேர் வீடிழந்த அவலம்… !

வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

இதில் 7,000க்கும் மேற்பட்ட அகதிகள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மியான்மரில் சிறுபான்மையினராக வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இவர்களுக்காக வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் பிளாஸ்டிக் பேப்பர்கள், தார்பாய்கள், தகரங்கள், மூங்கில்களை கொண்டு அமைக்கப்படும். இவை மழைக்காலங்களில் நனைத்து விழுந்துவிடும். வெயில் காலங்களில் தீக்கிரையாகும்.

அந்த வகையில் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள குட்டுபலாங் முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, அங்கிருந்த 1,200க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்து சாம்பலாக்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வீடுகள் அனைத்தும் முழுவதுமாக தீக்கிரையானதால், 7,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிப்பிடங்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருக்கும் முகாம்கள் தீக்கிரையாவது அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான். இதே போல் 2021ல் ஏற்பட்ட தீவிபத்தில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இதில் 15க்கும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *