£123 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்: வெற்றியை தட்டி தூக்கிய பிரித்தானியர்
லொட்டரி டிக்கெட் வைத்திருக்கும் பிரித்தானியர் ஒருவர் £123 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் வெற்றி பெற்றுள்ளார்.
யூரோ மில்லியன் ஜாக்பாட்
2024ம் ஆண்டு யூரோ மில்லியன் ஜாக்பாட்டின் லொட்டரி வெற்றியாளர் எண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி லொட்டரி டிக்கெட் வைத்திருக்கும் பிரித்தானியாவை சேர்ந்த நபர் சுமார் £123 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் ஒருப்பகுதியாக வெற்றி பெற்றுள்ளார்.
£123 மில்லியன் லொட்டரி ஜாக்பாட் வெற்றியை பிரித்தானியர் மற்றொரு ஸ்பெயின் நாட்டவருடன் சரிபாதியாக பகிர்ந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இரண்டு லொட்டரி வெற்றியாளர்களும் £61,708,231 என்ற பெருந்தொகையை தன்வசம் படுத்தியுள்ளனர்.
வெற்றி எண்கள்
வெற்றி பெற்ற எண்கள் முறையே, 5, 10, 19, 27, 30 அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 5 மற்றும் 6.
இது அற்புதமான இரவு, 2024ம் ஆண்டின் முதல் பிரித்தானிய லொட்டரி வெற்றியாளர் என்று தேசிய லொட்டரி மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் தெரிவித்துள்ளார்.