கர்ப்பமாக்கினால் 13 லட்சம் பரிசுத்தொகை…” நூதன முறையில் ஏமாற்றிய மோசடி கும்பல்!
ழந்தை இல்லாத பெண்களைக் கருத்தரிக்க வைப்பதாகக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.புதுமையான முறையில் பல மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் பீகாரின் நவாடா பகுதியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று `ஆல் இந்தியா ப்ரெக்னென்ட் ஜாப் ஏஜென்சி’ என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.
கணவன் மற்றும் பார்ட்னர்களால் கருத்தரிக்க முடியாத பெண்களைக் கருத்தரிக்க வைப்பதே இக்குழுவின் டார்கெட் என வாட்ஸ்அப்களில் விளம்பரப்படுத்திக் கொண்ட நிறுவனம், அப்பெண்களுக்கு உதவ நினைப்பவர்கள் இக்குழுவில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் 13 லட்சம் வரை பெற முடியும் என்று ஆசைகாட்டி விளம்பரம் செய்துள்ளது.
உதவ முன்வரும் ஆண்கள் இதற்காக 799 ரூபாய் செலுத்தி முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு அவர்களுக்கு பல பெண்களின் புகைப்படங்கள் அனுப்பபடும். அவர்கள் தேர்வு செய்யும் பெண்களுடன் ஒன்றாக இருந்து அவர்களைக் கருத்தரிக்க வைக்கலாம்.
பெண்களின் அழகைப் பொறுத்து இந்தத் தொகையும் 20,000 ரூபாய் வரை மாறுபடும். இந்தத் தொகையை அந்த நபர் செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்த வேண்டும். வெற்றிகரமாக அப்பெண்களைக் கருத்தரிக்க வைக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பரிசுத்தொகையாக 13 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
ஒருவேளை கருத்தரிக்க வைக்க முடியாத பட்சத்தில், ஆறுதல் பரிசாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களது அக்கவுன்ட்டில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலர் இதில் முதலீடு செய்த நிலையில், ஏமாந்த பின்னரே மோசடி கும்பல் என்பதை அறிந்துள்ளனர்.
சைபர் கிரைம்வாங்காத கடனுக்கு மார்பிங் செய்த படத்தை அனுப்பி மிரட்டும் கும்பல் – சைபர் கிரைம் போலீஸில் புகார்
பீகார் காவல்துறை அதிகாரிகள் மோசடி கும்பலைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் 2 பிரின்ட்டர்கள் மற்றும் பல டேட்டா ஷீட்களை கைப்பற்றியுள்ளனர். ஆனாலும், இம்மோசடி கும்பலின் தலைவன் முன்னா குமார் தப்பியுள்ளார்.
காவல்துறையினர் மோசடி குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.