பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர், பனிப்பொழிவு: -15C வெப்ப நிலைக்கு செல்ல வாய்ப்பு

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவை பிரித்தானியா வரும் வாரங்களில் எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு

பிரித்தானியா கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்பொழிவையும் கடுமையான ஆழ்ந்த குளிரையும் எதிர்கொள்ள உள்ளது.

பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் வரும் வாரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில், எவ்வளவு பனிப்பொழிவு இருக்கும் எந்த இடங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்பதை துல்லியமாக தெரிவிக்கவில்லை.

ஆனால் வரும் வாரங்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவின் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

எக்ஸாக்டா வானிலை முன்னறிவிப்பாளர் (Exacta Weather forecaster) ஜேம்ஸ் மேடன்(James Madden), நாடு முழுவதும் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவில் 2010 ம் ஆண்டுக்கு பிறகு அச்சுறுத்தும் கடும் குளிர் மற்றும் மிகப்பெரிய பனிப்பொழிவை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடும் பனிப்பொழி இருக்கும் நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை -15C செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

நவீன வானிலை மாடல் கணிப்பு

நவீன வானிலை கணிப்பு மாடலான WX Charts, அடுத்த வார இறுதியில் ஒட்டுமொத்த நாடும் பனியால் மூடப்படுவதை காட்டுகிறது.

மேலும் ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமைகளில் Brecon Beacons மற்றும் Cairngorms தேசிய பூங்காவில் உள்ள மேடான பகுதிகளில் தரையில் இருந்து 40 cm அளவுக்கு பனி படிவதற்கான வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.

அதைபோல ஸ்காட்லாந்தில் 25 cm அளவுக்கும், வேல்ஸில் 17cm அளவுக்கும், வடக்கு லண்டன் பகுதியில் 8cm, மத்திய மற்றும் தெற்கு லண்டனில் 6cm பனிப்பொழிவு இருக்கும் என டெய்லி ஸ்டார் அறிக்கை தெரிவிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *