ஒரு காட்சிக்காக 15 பச்சை மிளகாய்களை கடித்து சாப்பிட்ட தனுஷ்!!
அவரது நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திலும் மாறுபட்ட தோற்றத்தை வழங்கி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு தனுஷ் கொண்டு சென்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் தேவதையை கண்டேன் என்ற படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ஸ்ரீதேவிக்காக யார் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற போட்டி நடைபெறும்.
அப்போது உண்மையான பச்சை மிளகாய் சாப்பிட வைக்க தனுஷ் சொல்லியுள்ளார். அந்த நேரத்தில் ஒரே ஷாட்டில் சுமார் 15 மிளகாய்களை தனுஷ் கடித்து சாப்பிட்டுள்ளார். அவ்வாறான தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அவரை இன்று முன்னணி ஹீரோவாக மாற வைத்துள்ளது. என அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில். இது தொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துள்ளனர்.