பிரித்தானியாவில் இன்றுடன் முடிவுக்கு வந்த 15 ஆண்டு விதி: தேர்தலில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தலாம்…

வெளிநாடுகளில் 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற ஒரு விதி பிரித்தானியாவில் இருந்தது.

அதனால், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை இருந்தது.

விதியை மாற்ற போராடிய நபர்

இந்த விதியை மாற்றக் கோரி, அதாவது, வெளிநாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கவேண்டும் என்று British in Europe என்னும் ஒரு அமைப்பு நீண்டகாலமாக போராடி வந்தது.

அந்த அமைப்பைச் சேர்ந்த Harry Shindler (101) என்பவர், வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கும், அவர்கள் எத்தனை ஆண்டுகள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கவேண்டும் என்று 20 ஆண்டுகளாக போராடிவந்தார். 2016ஆம் ஆண்டு, அவர் இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கும், 2028ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றார்.

இன்றுடன் முடிவுக்கு வந்த 15 ஆண்டு விதி

இந்நிலையில், 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற விதி இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆகவே, இந்த ஆண்டு பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இதனால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, இந்த முறை தோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக தங்களை வாக்களிக்க விடாமல் வைத்திருந்த அரசாங்கங்களுக்கு மத்தியில், இந்த அரசு தங்களுக்கு வாக்களிக்க உரிமை பெற்றுத்தந்துள்ளதால், வெளிநாடு வாழ் பிரித்தானியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *