1947 பிரிவினை, விமானத்தில் தப்பிவந்த சகோதரர்கள்.. 2வது இன்னிங்க்ஸ்-ல் உருவான India Gate..!!
லியால்பூர் தற்போது பாகிஸ்தானின் பைஸ்லாபாத்-ல் (Faisalabad) குஷி ராம், பிஹாரி லால் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தனர்.
இருவரும் சேர்ந்து அப்போதையை பஞ்சாபில் விவசாயிகளிடம் பருத்தியை வாங்கிச் சென்று மும்பையில் உள்ள பருத்து மில்களுக்கு விற்று வந்தனர்.கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வியாபரம் பெருகி அவர்களே சொந்தமாக பருத்தி மில்களையும் சில ஜவுளி மில்களையும் தொடங்கினர். இதை தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பஞ்சாப் விவசாயிகளிடம் கோதுமையை வாங்கி அதை பிரிட்டிஷ் ஏஜென்சிகளிடம் விற்று வந்தனர்.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் 1947இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை லார்டு மவுண்ட்பேட்டன் அறிவித்தார். இதனால் குஷி ராம், பிஹாரி லால் சகோதரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போனது.குஷி ராம், பிஹாரி லால் குடும்பத்துடன் ஒரு டகோடா விமானத்தில் இந்தியாவுக்குத் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்து வந்தனர். அந்தக் காலத்தில் அந்த சார்ட்டு விமானம் ரூ.4000 கட்டணம் வசூலித்தது, அந்த அளவுக்கு குஷி ராம், பிஹாரி லால் பெரும் பணம் பலம் கொண்டு இருந்தனர்.
பாகிஸ்தான் மண்ணில் அந்த விமானம் புரப்பட்டு, பத்திரமாக சப்தர்ஜங் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக அவர்களது குடும்பத்துக்கு டெல்லியின் சாந்தினி சௌக்கின் அருகே உள்ள நயா பஜாரில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது.அங்கிருந்து சகோதரர்கள் இருவரும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் இருவரும் சேர்ந்து அரிசி மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை ஆரம்பித்தனர்.அவர்களது கம்பெனி மெல்ல வளர்ந்தது, 1985 ஆம் ஆண்டில் அவர்களது முதல் ஆலையான கேஆர்பிஎல் மூலம் அரிசியை மட்டும் விற்று விற்க துவங்கினர். உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் அந்த ஆலை அமைந்திருந்தது.அந்த காலத்திலேயே இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு பெறும் முதல் இந்திய அரசி கம்பெனியாக கேஆர்பிஎல் உருவெடுத்தது.