2 நிமிட சட்னி: சின்ன வெங்காயத்தோடு இந்த 3 பொருளை சேர்த்து அரைச்சு நல்லெண்ணெய் ஊத்துங்க.. ருசியான சட்னி ரெடி!

காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பொறுமையாக சட்னி செய்ய நேரம் இல்லையா? 2 நிமிடத்தில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா?

அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்துடன், பூண்டு, பச்சை மிளகாய், புளி சேர்த்து அரைத்து, எண்ணெய் ஊற்றினால் போதும், சட்னி தயார். இந்த சட்னி நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த சட்னியை வெளியூர் செல்லும் போது செய்து, தோசை சுட்டு எடுத்து சென்றால் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் – 20
* பூண்டு – 10 பல்
* பச்சை மிளகாய் – 2 (விதைகளை நீக்கியது)
* புளி – 1 சிறிய துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சை மிளகாயை கீறி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் நல்லெண்ணெயை தேவையான அளவு ஊற்றி கிளறினால், சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.

குறிப்பு:

விருப்பமுள்ளவர்கள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறிவிடலாம். ஆனால் தாளிக்காமல் அப்படியே சாப்பிடும் போது, அதன் சுவை தனித்து இருக்கும். நிச்சயம் உங்களுக்கு இந்த சட்னி பிடிக்கும், ட்ரை செய்து பாருங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *