குஜராத் மானத்தை காப்பாற்றிய 2 தமிழர்கள்.. முக்கிய கட்டத்தில் அபார செயல்பாடு.. நெஹ்ரா ஹாப்பி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ரோகித் சர்மா,பும்ரா, ஹர்திக் பாண்டியா இஷான் கிஷன், டிம் டேவிட் போன்ற பலமான பேட்டிங் வரிசை இருந்தும் வெறும் 169 என்ற இலக்கை குஜராத் அணி அபாரமாக தற்காத்துக் கொண்டது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை இரண்டு தமிழர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் சாகா 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் 22 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் குஜராத் அணியை பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டார். இந்த கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பும்ரா அபாரமாக பந்து வீசினார்.அவருக்கு தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்சேவும் நல்ல கம்பெனி கொடுக்க குஜராத் அணி தடுமாறியது.

இந்த கட்டத்தில் அடித்து ஆடாமல் பொறுப்பாக விளையாடிய சாய் சுதர்சன், குஜராத் அணியை கட்டமைத்தார். 17வது ஒவ்வொரு வரை நின்ற சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இதனால் குஜராத் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது.

இதேபோன்று குஜராத் அணியின் பந்து வீச்சிலும் மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் அபாரமாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். மும்பை வீரர் இசான் கிஷன் டக் அவுட் ஆனாலும், ரோகித் சர்மா மற்றும் நமன்,பிரவீஸ் போன்ற வீரர்கள் அதிரடி காட்டி ரன்களை வேகமாக குவித்து வந்தார்கள்.

அப்போது குஜராத் அணிக்காக பந்து வீசிய சாய கிஷோர் 4 ஓவர் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு முக்கிய விக்கெட் வீழ்த்தினார். அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரர் ரோகித் சர்மா எந்த நெருக்கடியும் இன்றி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அபாயகரமான வீரராக திகழ்ந்தார்.

அப்போது சாய் கிஷோர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பிறகுதான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். ஒருவேளை ரோகித் சர்மா மட்டும் இன்னும் ஒரு ஐந்து ஓவர் நின்று இருந்தால்,போட்டி பதினாறாவது ஓவரிலே முடிந்திருக்கும். பேட்டிங்கில் அச்த்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *