20 பேர் கூட வாங்காத ஹூண்டாய் கார்! பலத்த அடி வாங்கியதற்கான காரணம் என்ன?
ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 42,750 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை வாங்க 20 வாடிக்கையாளர்கள் கூட இல்லாத மோசமான நிலை இருந்து வருகிறது. இது என்னவோ டிசம்பர் மாதம் மட்டும் ஏற்பட்ட நிலை என நீங்கள் கருத வேண்டாம். கடந்த நவம்பர் மாதத்திலும் இதே நிலைதான் ஏற்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக இருக்கிறது. ஹூண்டாய் கார்களுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. மாருதிக்கு அடுத்தபடியாக மக்கள் பலர் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தில் இந்த ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் கார்களின் விற்பனையும் அதிகமாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பெயர் போனது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிரெண்ட் அதிகமாகி வருகிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். புதிதாக கார் வாங்கும் பலர் எலெக்ட்ரிக் கார்களை குறிவைத்து அந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்கினால் நல்ல லாபம் என்ற கணக்கீடு செய்து எலெக்ட்ரிக் காரர்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் மார்க்கெட்டையும் பிடிப்பதற்காக கோனா இவி எலெக்ட்ரிக் காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த காரின் விற்பனை தான் தற்போது கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த காரை 20 வாடிக்கையாளர்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த ஹூண்டாய் கோனா இவி காரை 60 பேர் வாங்கி இருந்தார்கள். ஆகஸ்ட் மாதம் இருப்பதிலேயே அதிகபட்சமாக 91 கார்கள் விற்பனையாகி இருந்தன. செப்டம்பர் மாதம் 69 கார்களும், அக்டோபர் மாதம் 44 கார்களும் விற்பனையாக இருந்தன. இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிக மோசமாக தலா வெறும் 19 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.
ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல் கார்களை சிறப்பாக விற்பனை செய்து வந்தாலும் எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்ய திணறி வருகிறது என்றே சொல்லலாம். இதற்கு ஹூண்டாய் நிறுவனத்திடம் போதுமான அளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திடம் தற்போது கோனா என்ற எலெக்ட்ரிக் வாகன மட்டுமே இருக்கிறது.
இந்த வாகனத்தின் விற்பனை மிக குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இதன் விலை தான் இந்த கார் தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 23.84 லட்சம் முதல் 24.03 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இவ்வளவு அதிகமாக விடை கொடுத்து கார் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே குறைவு என்பதால் இந்த கார்களின் விற்பனை குறைவாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கோனா இவி காரைப் பொறுத்தவரை 5 சீட்டர் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும் இந்த காரில் 39 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 136 பிஎஸ் பவரையும் 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை சற்று அதிகமாக இருப்பதால் இந்த காரை வாங்க வாடிக்கையாளர்கள் சற்று தயக்கம் காட்டி வருகிறார்கள். மார்க்கெட்டில் எம்ஜி இசட்எஸ் என்ற காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வருகிறது.