200% உயர்ந்த பீரின் விலை.., மதுபானங்கள் தட்டுப்பாட்டால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபாரில் (Zanzibar) மதுபானங்கள் பற்றாக்குறையால் குளிர்பானங்கள் வழங்குவதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபானங்கள் தட்டுப்பாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள சுற்றுலா பிரதேசம் ஜான்ஜிபார் (Zanzibar). இப்பகுதியின் முக்கிய வருவாயே சுற்றுலா பயணிகள் மூலமாக தான் கிடைக்கிறது.
கோடைகாலங்களில் உலகெங்கும் உள்ள சுற்றுலா பயணிகள் Zanzibar -க்கு வருவது வழக்கம். அவர்கள், இங்குள்ள குளிர்ந்த பீரை பருகுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், சில மாதங்களாக இங்கு மதுபானங்கள் தட்டுப்பாடாகவே உள்ளது. பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
குளிர்பானங்கள்
இதனால், இங்குள்ள தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஹொட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிடும் எனவும் அச்சப்படுகின்றனர்.
Zanzibar தீவுகளில் உள்ள பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக உள்ளதால் மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைக்கேற்ப தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.
ஆனால் இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் 12000 டொலர் ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறையாகும். இந்த நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.