2023, 2024 இறுதிப் போட்டி – மகிழ்ச்சியோடு ஒற்றுமையாக தோல்வியை கொண்டாடிய டெல்லி வீராங்கனைகள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி முதல் முறையாக சாம்பியனானது. ஐபிஎல் தொடரில் இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஒரு சீசன்களில் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.
இதே போன்று தான் கடந்த ஆண்டு நடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை வென்றது.
இந்த 2 சீசனிலும் இந்திய அணியை சேர்ந்த கேப்டன்கள் தான் டிராபியை வென்று கொடுத்துள்ளன. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், வலி வேதனையை மறந்து மகிழ்ச்சியோடு ஒற்றுமையாக தோல்வியை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/CricCrazyJohns/status/1769611022778929539