2024ல் இந்த 6 கார்கள் தான் மொத்தத்தையும் புரட்டி போட போகுது! டாடா, மாருதி எல்லாம் கட்டம் கட்டிட்டாங்க!

இந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 6 புதிய மிட் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் களமிறங்க உள்ளன. அதன்படி மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, சிட்ரோன் ஆகிய நிறுவனங்களிலிருந்து கார்கள் புதிதாக களமிறங்க உள்ளன. அந்த கார்களை பற்றி தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.

டாடா கர்வ்: டாடா நிறுவனத்தின் கர்வ் என்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார் அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் இன்டெர்னல் கம்பேஷன் இன்ஜின் ஆகிய இரண்டு வெர்ஷனிலும் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது. இதில் எலக்ட்ரிக் வெர்ஷன் கார் முழு சார்ஜில் 500 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் டூயல் மோட்டார் செட்டப் உடன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியன்ட் தான் கர்வ் காரின் டாப் வேரியன்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் கான்செப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த கார் விற்பனைக்கு வருவதற்காக பலர் காத்திருக்கிறார்.

மாருதி சுஸூகி இவிஎக்ஸ்: மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தும் என கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் கான்செப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தது. கிட்டத்தட்ட புரொடக்ஷன் வெர்ன் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜப்பான் ஆட்டோமொபைல் ஷோவில் இந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இந்த கார் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சிங்கிள் சார்ஜில் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என குஜராத் மாநிலத்தில் நடந்த உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் கிரெக்டா இவி : ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெக்டா காரின் இவி வெர்ஷனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்த 2024 ஆம் ஆண்டு அறிமுகமாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த கார் பிடித்த பல முக்கியமான தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன. முக்கியமாக இந்த காரில் 45 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்படும் என தெரிகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த கிரெட்டா இவி காருக்கான பேட்டரியை எல்ஜி சேம் என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கி தனது காரில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக நமக்கு தெரிகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் எல்லாம் போய்க் கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இதன் மோட்டாரை பொறுத்தவரை ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காரில் உள்ள அதே மோட்டார் தான் இதிலும் பொருத்தப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி இ.8: மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி இ.8 என்ற எலெக்ட்ரிக் காரை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் இன்குலோ ஃபிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராக இருக்கும். இந்த கார் தான் மஹிந்திரா நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் ஒரு தடவை சார் செய்தால் 450 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 700 காரில் உள்ள அதே டிசைன் அம்சங்கள் எல்லாம் இந்த எக்ஸ்யூவி இ.8 காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதன் முன் பகுதி பலரை கவரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சஃபாரி இவி: டாடா நிறுவனம் தற்போது தீவிரமாக கார் கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை உருவாக்க பணியாற்றி வருகிறது. இதில் சஃபாரி எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் 2024 ஆம் ஆண்டு இந்த கார் வெளியாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இதன் டிசைனை பொறுத்த வரை பெரும்பாலும் பெட்ரோல் இன்ஜின் காரை போலவே இந்த கார் உருவாக்கப்படும் எனவும் இது எலெக்ட்ரிக் கார் என்பதை குறிப்பதற்காக சில டிசைன் மாற்றங்கள் மட்டுமே இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *