2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் பாதுகாப்பு அம்சங்கள் விபரம் வெளியானது
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய கிரெட்டா எஸ்யூவி காரில் உயர்தர பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, லெவல் 2 ADAS தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.
கிரெட்டா எஸ்யூவி காரில் 115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்த என்ஜின் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது. 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
2024 Hyundai Creta Facelift
ஹூண்டாய் கிரெட்டாவில் ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பில் 19க்கு மேற்பட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றது. அவற்றில் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஆல்-வீல் டிஸ்க் பிரேக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாடலில் மேம்ப்பட்ட டேஸ்போர்டில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எட்டு ஸ்பீக்கர் உடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், முன்புறத்தில் காற்றோட்டமான இருக்கைகள், எட்டு வழியில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் ஓட்டுனர் இருக்கை கொண்டுள்ளது.
10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரையுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிங்,பெற்றதாக உள்ளது. கனெக்ட்டிவிட்டி வசதிகளில் 70க்கு மேற்பட்ட அம்சங்கள் இடம்பெறலாம்.
இந்தியாவில் சமீபத்தில் நடைமுறைக்கு வந்த பாரத் NCAP சோதனை முறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள கிரெட்டா காரின் பாதுகாப்பு நட்சத்திர மதிப்பீடு ஜனவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்படலாம்.