₹ 5.24 லட்சத்தில் 2024 கவாஸாகி நின்ஜா 500 விற்பனைக்கு வெளியானது
டீசர் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குள் இந்தியாவில் புதிய கவாஸாகி நின்ஜா 500 பைக் மாடலை ரூ.5.24 லட்சம் விலையில் ஒற்றை ஸ்பார்க் கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் டெலிவரி அடுத்த சில வாரங்களுக்கு பிறகு துவங்க உள்ளது.
நின்ஜா 500 பைக்கில் 451சிசி, பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 9000 ஆர்பிஎம்-ல் 45 hp மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 42.6 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமான ஸ்டைலிங் பெற்றுள்ள நின்ஜா 500 மாடலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.
17 அங்குல அலாய் வீல் பெற்ற நின்ஜா 500 மாடல் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்று பிரேக்குகள் 310 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.