ரூ.9.29 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2024 Kawasaki Z900…!
2024 Kawasaki Z900 பைக்கானது இந்தியாவில் ரூ.9.29 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விலையானது இது 2023-ஆம் ஆண்டு Z900 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையை விட ரூ.9,000 அதிகம் ஆகும். இது மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளூ மற்றும் மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். இது விலை மாற்றத்தை தவிர 2023 மாடலில் இருக்கும் அதே எஞ்சின், அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பிற ஹார்ட்வேரை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை Z900 மோட்டார் சைக்கிளானது ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள், BMW F 900 R மற்றும் Ducati Monster போன்ற வாகனங்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
கவாஸாகி நிறுவனமானது 2024 Kawasaki Z900 மோட்டார் சைக்கிளில் காஸ்மெட்டிக் அல்லது மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 Z900 மோட்டார் சைக்கிளில் அதே 948 சிசி, லிக்விட்-கூல்ட் , 4 சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 9,500 rpm-ல் 123.6 bhp ஆற்றலையும், 7,700 rpm-ல் 98.6Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Full மற்றும் Low என 2 பவர் மோட்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
லோ பவர் மோட்-ல் பவர் டெலிவரியானது முழு பவரில் 55% மட்டுமே இருக்கும். இந்த ஆப்ஷனானது பவர் மற்றும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸை குறைப்பதன் மூலம் மோட்டார் சைக்கிளை மேலும் வசதியாக நிர்வகிக்க கூடியதாக மாற்ற உதவுகிறது. தவிர கவாஸாகி ட்ராக்ஷன் கன்ட்ரோலையும் வழங்குகிறது, இது ட்ராக்ஷன் லாஸை கண்டறியும் போது பவரை கட்-ஆஃப் செய்கிறது.
அதே போல இதில் Sport, Road, Rain மற்றும் Rider என 4 ரைடிங் மோட்ஸ்கள் உள்ளன. இதில் Rider மோடில் மேனுவல் செட்டிங்ஸை பயன்படுத்த முடியும். டேஷ்போர்டாக செயல்படும் TFT ஸ்கிரீன் மூலம் இவை அனைத்தையும் செய்ய முடியும். கவாஸாகி Z900 பைக்கானது ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய கலர் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஆல்-எல்இடி லைட்டிங்கையும் நிறுவனம் இதில் வழங்கி இருக்கிறது.
இந்த மோட்டார் சைக்கிள் ஒரு high-tensile ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேமை கொண்டுள்ளது, இது வலிமை மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. சஸ்பென்ஷனிற்காக இதன் முன்பக்கத்தில் 41 மிமீ அப்-சைடு டவுன் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் உள்ளது. பிரேக்கிங்கிற்காக முன்பக்கத்தில் டூயல் 300 மிமீ டிஸ்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் 250 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 17 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. கவாஸாகியின் Z900 மோட்டார் சைக்கிளானது 212 கிலோ எடையும் 820 மிமீ சீட் ஹைட்டும் கொண்டது.