இந்தியாவில் அறிமுகமான 2024 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்.. சிறப்பம்சங்கள் என்ன?

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா (JLR) நிறுவனம் சமீபத்தில் 2024 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் துவக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய அப்டேட்டட் கார் புதுப்பிக்கப்பட்ட கேபினுடன், ஸ்டைலிங்கில் சில அப்கிரேட்டையும் பெற்றுள்ளது. இந்த காரை வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் இருந்து இந்த கிங் சைஸ் எஸ்யூவி-யை புக் செய்யலாம். இல்லை என்றால் JLR நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று ஆன்லைன் மூலம் ரிசர்வ் செய்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் டிஸ்கவரி ஸ்போர்ட் காரானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகளவில் அப்டேட் செய்யப்பட்டு தற்போது இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2024 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அப்டேட்ஸ்:

இந்த அப்டேட்டட் காரின் எக்ஸ்டீரியரை பார்த்தோம் என்றால் நிறுவனம் சில நுட்பமான அப்டேட்ஸ்களை செய்துள்ளது. இந்த காரின் எக்ஸ்டீரியரானது முன்பை விட மிகவும் கம்பீரமானதாக, ஸ்டைலாக மற்றும் எளிதில் ஈர்க்க கூடிய டிசைனில் இருக்கிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய கார் இப்போது பியானோ பிளாக் ஃப்ரன்ட் கிரில் உடன் வருகிறது. இது புதிதாக வடிவமைக்கப்பட்ட ஃபுல் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லேம்ப்ஸ், கண்ணைக் கவரும் LED DRL-க்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 19-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த காரின் ஒட்டுமொத்த சாலைத் தோற்றத்தை மேம்படுத்தி இதனுடன் போட்டி போடும் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வண்ணம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த காரில் ஒரு புதிய வெரெசின் ப்ளூ கலர் ஆப்ஷனை சேர்த்துள்ளது.

இன்டீரியர் மற்றும் அம்சங்கள்:

இந்த காரில் செய்யப்பட்டுள்ள இன்டீரியர் அப்டேட்டை பொறுத்த வரை 2024 டிஸ்கவரி ஸ்போர்ட் கார் இப்போது நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட11.4-இன்ச் பிவி ப்ரோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமுதன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் ஆட்டோ கார்ப்ளே உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் கார் காண்ட் டெக்னலாஜியையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இதில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் பிற அம்சங்களில் 360 டிகிரி கேமரா, ஒரு பனோராமிக் கிளாஸ் ரூஃப், ஒரு கேபின் ஏர் ப்யூரிஃபிகேஷன் சிஸ்டம் அமைப்பு, 3D சரவுண்ட் மானிட்டரிங் சிஸ்டம் என பல உள்ளன.

எஞ்சின் விவரங்கள்:

245BHP பவர் மற்றும் 365Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 201BHP பவர் மற்றும் 430Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் என இந்த அப்டேட்டட் மாடல் 2 எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்த 2 என்ஜின்களும் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *