2024 மக்களவைத் தேர்தல் பணிகள்: தொகுதி வாரியாக பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள்,பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட “நிர்வாகிகள் சந்திப்பு” கீழ்க்கண்ட அட்டவணைப்படி. சென்னை, அண்ணா சாலை. “அண்ணா அறிவாலயத்தில்”நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நாளை மறுநாள் தொடங்கி அதாவது ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *