புது புது அம்சங்களுடன் களமிறங்கும் 2024 Ola S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… எப்போது டெலிவரி ஸ்டார்ட் தெரியுமா?
பிரீமியம் எலெக்ட்ரிக் டூ-வீலர் தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், X சீரிஸில் புதிய வேரியன்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் அதன் S1 லைன்அப்-ஐ,விரிவுபடுத்தியுள்ளது. ஓலா நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மாடலான 2024 S1X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சக்திவாய்ந்த 4kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. மேலும் இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறி இருக்கிறது. 2024 Ola S1X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது இந்தியாவில் ரூ.1,09,999 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டருக்கான டெலிவரி வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ளது.
இதனை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மூலம் இந்த புதிய இ-ஸ்கூட்டரை புக்கிங் செய்யலாம். மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வழியாக ஆன்லைனிலும் புக்கிங் செய்யலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த 2024 Ola S1X மாடல் மிட்நைட், ரெட் வேலாசிட்டி, ஸ்டெல்லர், வோக் (Vogue),Porcelain White, ஃபங்க் மற்றும் லிக்விட் சில்வர் என மொத்தம் 7 கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ola S1X ஸ்கூட்டரானது மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டிருக்கிறது. அதே போல வெறும் 3.3 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இது கொண்டுள்ளது.இது 4.3-இன்ச் செக்மென்டட் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளது மற்றும் அன்லாக் செய்வதற்கான பிஸிக்கல் கீ-யுடன் வருகிறது.
புதிய 4kWh வேரியன்ட்டானது 3kWh மாடலில் காணப்படும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களுடன் வரவில்லை. இதில் பெரிய 5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கீலெஸ் அன்லாக் போன்றவையும் கொடுக்கப்படவில்லை. S1X சீரிஸில் பட்ஜெட்டுக்கு ஏற்ற 2kWh வேரியன்ட்டும் உள்ளது. விலை குறைவாக கிடைத்தாலும் இதன் ரேஞ்ச் அதாவது மைலேஜ் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 143 கிலோ மீட்டர் மட்டுமே. இதனிடையே நார்மல் சார்ஜரைப் பயன்படுத்தி இந்த புதிய ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது. அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் இதில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடையிலும் மாற்றம் உள்ளது. இந்த 2024 மாடல் அதன் முந்தைய மாடலை விட 4 கிலோ எடை அதிகமாகும்.
எக்ஸ்டன்டட் வாரண்டி:
வாடிகையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக வைத்திருக்க ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் தனது அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசைக்கும் 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ என்கிற அளவில் உத்தரவாதத்தை நீட்டித்துள்ளது. ஆப்ஷனல் வாரண்டி பேக்கேஜையும் நிறுவனம் வழங்குகிறது. கூடுதல் பாதுகாப்பை விரும்புவோருக்கு 1,25,000 கிமீ வரை கவரேஜை நீட்டிக்கும் வாரண்டி பேக்கேஜாக இது உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, இந்த காலாண்டின் இறுதிக்குள் சார்ஜிங் யூனிட்களின் எண்ணிக்கையை 1,000 முதல் 10,000-ஆக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தவிர தனது சர்விஸ் நெட்ஒர்க்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 600 மையங்களாக உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அணுகல் மற்றும் வசதியை மேம்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.