2024 யமஹா FZ-X பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்ற நியோ ரெட்ரோ ஸ்டைல் பெற்ற யமஹா FZ-X பைக்கில் 150cc என்ஜின் பொருத்தப்பட்டு கனெக்ட்டிவிட்டி வசதிகள் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன் நவீனத்துவமான அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் யமஹா நிறுவனம் தனது 150cc வரிசையில் உள்ள FZ சீரிஸ், FZ X மற்றும் ஆர்15 வி4 பைக்குகளில் புதிய நிறங்களை வெளியிட்டுள்ளது. மற்றபடி எந்த மாடலிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை.

2024 Yamaha FZ-X
குறிப்பாக குறைந்த விலையில் கிடைக்கின்ற நியோ ரெட்ரோ ஸ்டைல் பெற்ற FZ-X பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட் டிசைன் கொடுக்கப்பட்டு பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குடன் இணைந்த எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இண்டிகேட்டர், எல்இடி டெயில் லைட் மற்றும் கோல்டன் நிறத்திலான அலாய் வீல் கொண்டுள்ளது.

தற்பொழுது மேட் ப்ளூ, மேட் காப்பர், மற்றும் மேட் டைட்டன் என்ற புதிய நிறம் என மூன்றும் உடனடியாக விற்பனையில் கிடைக்கும் நிலையில் FZ-X க்ரோம் நிறம் ஆனது பிப்ரவரி 2024 முதல் கிடைக்க உள்ளது.

யமஹா தனது பைக்குகளில் அடிப்படை அம்சமாக இணைத்துள்ள இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System- TCS) ஆனது FZ-X பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் சாலைகளில் உள்ள மாறுபட்ட தன்மையால் ஏற்படுகின்ற வீல் ஸ்பீன் மூலம் பைக் நிலை தடுமாறுவது அல்லது கீழே விழுவதனை தடுக்கும் வகையில் மின்னனு அமைப்பின் உதவியுடன் சக்கரங்களுக்கு கூடுதல் பவரை வழங்கி கட்டுப்படுத்துகின்றது.

ஏர் கூல்டு 4-ஸ்ட்ரோக் 149cc SOHC, 2-வால்வு, ஒற்றை சிலிண்டர் 149cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முன்புறத்தில் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் பெற்று 165 மிமீ கிரவுண்ட் கிளியண்ஸ் கொண்ட யமஹா FZ-X பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று மொத்த எடை 139 கிலோ ஆகும். FZ-X பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 48-52KMPL வரை கிடைக்கின்றது.

முன்புறத்தில் 100/80-17M/C 52P டயருடன் 282mm உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் பினபுறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயருடன் 220mm டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.

ஸ்மார்ட் போன் இணைப்புடன் கூடிய நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் மூலம் Y-Connect ஆப் மூலம் இணைக்கும் பொழுது அழைப்பு, எஸ்எம்எஸ் & மின்னஞ்சல் எச்சரிக்கை, போன் பேட்டரி இருப்பு ஆகியவற்றுடன் கடைசியாக நிறுத்தியிருந்த இடம், மால்ஃபங்கஷன் அலர்ட், பராமரிப்பு தொடர்பான அறிவிப்பு, எரிபொருள் சிக்கனம், மற்றும் ரெவ்ஸ் டேஸ்போர்ட் ஆகியவற்றை பெறலாம்.

2024 Yamaha FZ-X onroad Price in Tamil nadu
ரூ. 1.38 லட்சத்தில் கிடைக்கின்ற யமஹா FZ-X பைக்கிற்கு போட்டியாளர்களாக கவாஸாகி W175 உள்ளது. இதுதவிர ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மற்ற மாடல்களில் சற்று கூடுதலான சிசி மற்றும் விலை கொண்ட ஹண்டர் 350 மற்றும் ரோனின் 225 உள்ளன.

2024 Yamaha FZ-X ஆன் ரோடு விலை ₹ 1,63,891

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *