22 வயது இளம்பெண்ணின் அபரீத வளர்ச்சி! பானி பூரி விற்றே ரூ.10 லட்சத்தில் கார்… பாராட்டுகள் குவியுது!!
ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கில் பானி பூரி விற்றுவந்த இளம் பெண் புதியதாக மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கியுள்ளார். இதனை அறிந்த ஆனந்த் மஹிந்திரா அந்த பெண்ணை வெகுவாக பாராட்டி உள்ளார். யார் இந்த பெண்? எங்கு உள்ளார்? எவ்வாறு பானி பூரியை விற்றே கார் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்? என்பதை இனி பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டீவ்வாக இருக்கக் கூடியவர். குறிப்பாக, எக்ஸ் தளத்தில் பல்வேறு விதமான விஷயங்களை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துக் கொண்டதை நிறைய முறை பார்த்திருக்கிறோம். முக்கியமாக, ஏழ்மையில் இருப்பவர்கள் புது முயற்சியாக செய்யும் தொழில்களை வெகுவாக பாராட்டக் கூடியவர், ஆனந்த் மஹிந்திரா.
அந்த வரிசையில், ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், மஹிந்திரா தார் வாகனத்தில் பானி பூரி விற்கும் இளம் பெண் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. டாப்சி உபாத்யாய் (வயது 22), டெல்லியை சேர்ந்தவரான இந்த பெண் இளங்கலை தொழிற்நுட்பவியல் (பி.டெக்) வரையில் படித்திருந்தும், கௌரவம் பார்க்காமல் பானி பூரி விற்க ஆரம்பித்தார்.
இதனாலேயே, பிடெக் பானி பூரி கேர்ள் என சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமடைய துவங்கிய டாப்சி உபாத்யாய், பின்னர் அதே ‘பிடெக் பானி பூரி வாலி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கி, தனது அன்றாட செயல்பாடுகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர ஆரம்பித்தார். இதன் பின்னரே, டெல்லி முழுவதும் அறியப்பட துவங்கிய டாப்சி உபாத்யாய்க்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தனர்.
இதன் எதிரொலிரயாக, இந்த இளம் பெண்ணின் பானி பூரி வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இவரது பானி பூரியை சாப்பிடவே பல கிமீ-கள் பயணம் செய்து வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், மேற்கு டெல்லியில் பல கிளைகளை திறந்த டாப்சி உபாத்யாய், ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் ஒன்றை வியாபாரத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
அதாவது, வெவ்வேறான இடங்களுக்கு புல்லட் பைக்கில் சென்று பானி பூரிகளை இவர் வழங்கி வந்தார். இது டாப்சி உபாத்யாய்யை மேலும் பிரபலமாக்கியது. நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூட, ‘புல்லட் பைக்கில் பானி பூரி விற்கும் பெண்’ என சில வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை பற்றி பார்த்திருந்தோம். இந்த நிலையில், டாப்சி உபாத்யாய் புதியதாக மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கி உள்ளார்.
இந்த விஷயம் ஆனந்த் மஹிந்திராவின் காதில் விழ, மஹிந்திரா தாருக்கு தனது வாகனத்தை அப்கிரேட் செய்துக் கொண்ட டாப்சி உபாத்யாய்யை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெகுவாக பாராட்டி உள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த எக்ஸ் பதிவில், “ஆஃப்-ரோடு வாகனங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்கள் இதுவரை செல்லாத இடங்களுக்கு செல்ல உதவும். சாத்தியமற்றதை ஆராய மக்களுக்கு உதவும்.