வாகன விற்பனையில் 23% வளர்ச்சி… ஜனவரியில் 3.39 லட்சம் யூனிட்களை விற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்!

நாட்டின் முன்னணி 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், கடந்த மாதம் அதாவது ஜனவரி 2024-ல், குறிப்பாக டூ வீலர் செக்மென்ட்டில் நேர்மறை விற்பனை செயல்திறனை பதிவு செய்துள்ளது.

TVS மோட்டார் நிறுவனம் ஜனவரி 2024-ல் 3,39,513 யூனிட்ஸ் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு அதாவது 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறுவனம் விற்பனை செய்திருந்த 2,75,115 யூனிட்களை விட 23 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 12,169 யூனிட்களாக இருந்த நிறுவனத்தின் மின்சார வாகன (EV) விற்பனை 34% வளர்ச்சியை பதிவு செய்து, நடப்பாண்டு அதாவது ஜனவரி 2024-ல் 16,276 யூனிட்களாக அதிகரித்துள்ளது. TVS நிறுவனம் தற்போது iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் MoM விற்பனையும் 12.46% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசம்பர் 2023-ல் TVS-ன் 3,01,898 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதே போல கடந்த 2023 ஜனவரியில் 2,64,710 யூனிட்களாக இருந்த நிறுவனத்தின் மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை இந்த 2024 ஜனவரியில் 3,29,937 யூனிட்களாக அதிகரித்து 25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 24% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2023 ஜனவரியில் 2,16,471 யூனிட்களாக இருந்த உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 2024 ஜனவரியில் 2,68,233 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

அதே போல 2023 ஜனவரியில் 1,21,042 யூனிஸ்ட்களாக இருந்த டிவிஎஸ் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, நடப்பாண்டு 2024 ஜனவரியில் 1,55,611 யூனிட்களாக அதிகரித்து 29% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023 ஜனவரியில் 1,06,537 யூனிட்களாக இருந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் விற்பனை 24% வளர்ச்சியைப் பதிவு செய்து இந்த ஜனவரி 2024-ல் 1,32,290 யூனிட்களாக உயர்ந்தது.ஜனவரி 2023-ல் 10,405 யூனிட்களாக இருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை இந்த 2024 ஜனவரியில் 9,576 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 2023 ஜனவரியில் 57,024 யூனிட்களாக இருந்த TVS நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து இருந்து 2024 ஜனவரியில் 69,343 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் இரு சக்கர வாகன ஏற்றுமதி 28% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2023 ஜனவரியில் 48,239 யூனிட்ஸ் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2024 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 61,704 யூனிட்களாக அதிகரித்துள்ளது. கன்டெய்னர்கள் கிடைப்பதில்நிலவும் ஒருசில சிக்கல்களால் ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டில் TVS மோட்டார் நிறுவனம் Apache RTR 310 மற்றும் X ஆகிய 2 பெரிய வாகனங்களை அறிமுகம் செய்தது. இதில் Apache RTR 310 ஆனது Apache RR 310-ன் நேக்ட் வெர்ஷனாகும். ஆனால் இது RR 310-ஐ விட அதிக அம்சங்கள் கொண்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *