யுவராஜ் சிங்கின் 24 வருட ரெக்கார்டை உடைத்த 18 வயது உள்ளூர் வீரர்.. கூச் பெஹார் கோப்பையில் அதிரடி

மும்பை : 24 ஆண்டு யுவராஜ் சிங்கின் உள்ளூர் போட்டி சாதனை ஒன்றை உடைத்து எறிந்து இருக்கிறார் 18 வயதே ஆன பிரகார் சதுர்வேதி. கூச் பெஹார் கோப்பை எனும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 1999இல் யுவராஜ் சிங் பேட்டிங்கில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்தார்.

அப்போது பீகார் – பஞ்சாப் அணிகள் இடையே அண்டர் 19 கிரிக்கெட் தொடரான கூச் பெஹார் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது பஞ்சாப் அணி சார்பாக ஆடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் குவித்தார். கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் அதுதான்.

24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை 18 வயது கர்நாடகா அணி வீரர் பிரகார் சதுர்வேதி முறியடித்தார். அவர் கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையேயான கூச் பெஹார் இறுதிப் போட்டியில் 638 பந்துகளில் 404 ரன்கள் குவித்தார். அதன் மூலம் யுவராஜ் சிங்கின் 358 ரன்கள் சாதனையை முறியடித்தார்.

தனது நீண்ட இன்னிங்க்ஸில் 46 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ரன் குவிப்பால் கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 380 ரன்கள் மட்டுமே குவித்தது. 510 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடகா. பின்னர் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து முன்னிலை பெற்ற அடிப்படையில் கர்நாடகா அணி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *