26 கிமீ மைலேஜ்! 2 குடும்பம் ஒன்னா போகலாம்! இந்த மாருதி காரை வாங்க இனியும் எல்லாரும் வரிசைலதான் நிக்க போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 3 வரிசைகளை கொண்ட இந்த காரில், மொத்தம் 7 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது. அத்துடன் வாடகைக்கு கார் ஓட்டுபவர்கள் மத்தியிலும், மாருதி சுஸுகி எர்டிகா மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. நீங்கள் மாருதி சுஸுகி எர்டிகா காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இனி அதிக தொகையை செலவு செய்ய வேண்டியது வரும்.
ஆம், மாருதி சுஸுகி எர்டிகா கார் தற்போது அதிரடியான விலை உயர்வை (Price Hike) சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ஒரே சீராக 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனி மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை இனி 13.03 லட்ச ரூபாயாக இருக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா கார் தற்போது மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை LXi(O), VXi(O), ZXi(O) மற்றும் ZXi Plus ஆகியவை ஆகும்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரில் மொத்தம் 7 கலர் ஆப்ஷன்கள் (Colour Options) கொடுக்கப்படுகின்றன. செயல்திறனை பொறுத்தவரையில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 102 பிஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gearbox Options) வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும், 1.5 லிட்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 87 பிஹெச்பி பவர் மற்றும் 121 என்எம் டார்க் ஆகும். இதன் பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிறப்பான மைலேஜ் வழங்கும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.