நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கான வீடுகள்
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் உண்டான நிலச்சரிவில் 26 பேர் பலியாகினர்.
கடந்த சில நாட்களாக தெற்கு சுமத்ரா தீவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின.
அவற்றில் 14 வீடுகள் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 11 பேர் மாயமானதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 26 பாலங்கள், 13 சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.