27 வயசுயலயே ரூ.9000 கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.. AI அசுர வளர்ச்சி!

ஸ்டார்ட் அப்! இப்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வார்த்தை தான். அரசாங்கமும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. நீங்கள் அப்படி ஒரு ஸ்டார்ட் அப் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் இவரை முன் உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள்.

உலகளவில் வளர்ச்சி கண்டு வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் இவர் தொடங்கிய ஸ்டார்ட் அப் மூன்று மாதங்களில் 100 பில்லியன் டாலர் என உயர்ந்துள்ளது.

பியர்ல் கபூர் – இந்தியாவில் இளம் வயதிலேயே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபரானவர் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 27 வயதாகும் பியர்ல் கபூர் கிட்டதட்ட 9 ஆயிரம் கோடி மதிப்புள்ள, ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரக்கூடிய யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இவர் தொடங்கிய சைபர் 365 (Zyber 365) நிறுவனம், மூன்றே மாதங்களில் யுனிகார்ன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. பியர்ல் கபூர் லண்டனில் உயர்கல்வியை முடித்து வணிக மற்றும் நிதி ஆலோசகராக பணியாற்றிவர். இவர் பில்லியன் பே டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

சைபர் 365: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில் முனைவோர்கள் பியர்ல் கபூர் மற்றும் சன்னி வகேலா ஆகியோர் இணைந்து 2023 மே மாதம் சைபர் 365 என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கினர். சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது இந்த நிறுவனம். இதன் தலைமையிடம் லண்டன், ஆனால் செயல்பாட்டு தளம் இந்தியா. இந்த நிறுவனத்தை பொறுத்தவரை பியர்ல் கபூர் தான் 90%க்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார்.

யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது எப்படி?: பொதுவாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீடு கொண்ட நிறுவனத்தை யூனிகார்ன் நிறுவனம் என அழைக்கிறோம்.

சைபர் 365 நிறுவனம் மே 2023இல் தொடங்கப்பட்டது. ஜூலை 2023இல் நடந்த நிதி திரட்டலின் போது , எஸ்ராம் & எம் ராம் குழு சுமார் 100 மில்லியன் டாலர்களை முதலீடாக செய்துள்ளது. இதன் மூலம் தொடங்கிய 3 மாதங்களிலேயே சைபர் 365 நிறுவனத்தின் மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள் என உயர்ந்து யூனிகார்ன் அந்தஸ்தையும் பெற்றது.

நிறுவனத்தின் 90%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதால் பியர்ல் கபூர் இளம் வயதிலேயே கோடீஸ்வரனாகி இருக்கிறார். ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக சைபர் 365 உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *