27 Years of Coimbatore Mapillai : காதல், காமெடி, கலக்கலான கோயமுத்தூர் மாப்ளே திரைப்படம்!

கோயமுத்தூர் மாப்ளே, காதல், காமெடி கலந்த வணிக திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சி.ரங்கநாதன்.

விஜய் மற்றும் சங்கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். கவுண்டமணியின் கலக்கல் காமெடியில் படம் நன்றாக இருக்கும். பொங்கலையொட்டி, இந்தப்படம் வெளியானது. இந்தப்படம் ஹிட் படமாக அமைந்தது.

பாலு, கோவையில் இருந்து வேலை தேடி சென்னை வருகிறார். அங்கு அவர், அவரது நண்பர் கோபாலுடன் தங்குகிறார். கோபால் தான் வேலை செய்வதாக கூறுகிறார். ஆனால் அவர் வேலை இல்லாதவர். இருவரும் சுமித்ராவின் வீட்டில் தங்குகிறார்கள். முதலில் பாலுவுக்கும், சுமித்ராவுக்கும் சண்டை ஏற்படுகிறது. ஆனால் அந்த மோதல் காதலில் முடிகிறது. இதற்கிடையில் சுமித்ராவின் உறவினர் மகேசும் அவரை காதலிப்பார்.

பாலு, ஒரு திருடன் நெக்லஸ் திருடுவதை பார்த்துவிடுவார். அவரை பிடிக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த திருடன் அந்த நெக்லஸை பாலுவின் பாக்கெட்டில் போட்டுவிடுவார். இதனால் பாலு திருடனாகி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுவார். இதனால் சுமித்ரா அவரை வெறுக்க துவங்கிவிடுவார். இந்த சூழலை மகேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் இருவரிடையே விரிசலை அதிகப்படுத்துவார்.

இந்நிலையில் சுமித்ராவின் பாட்டி பட்டமாளிடம் பாலு தனது கதையை கூறுவார். சிறுவயதில் தாயை இழந்த பாலு, அவரது சித்தியால் கொடுமைக்கு ஆளாவார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறுவார். இதை பட்டம்மாள் நம்புவார். இந்நிலையில் மகேஷ் என்ன செய்வார். பாலுவும், சுமித்ராவும் சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.

அண்ணாமலை தீபம், கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா, ஒரு தேதி பார்த்தால், ஜீவன் என் ஜீவன், பம்பாய் பார்ட்டி ஆகிய பாடல்கள் படத்தில் ஹிட்டானது. வித்யாசாகர் இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பார். விஜயின் ஆரம்ப கால படங்கள் அவரின் புகழுக்கு உதவியது. அதில் இந்தப்படம் மிகவும் முக்கியமானது. விஜய் – சங்கவி ஜோடிக்கும் அந்த காலத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது.

பொங்கலையொட்டி வெளியாகி நல்ல ஹிட் அடித்தது இந்த திரைப்படம். இந்த திரைப்பபடத்தில் கவுண்டமணி-விஜயின் காமெடி ரசிகர்களை கவர்வதாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *