ஓரே நாளில் 3 பெரிய நிறுவனங்கள் பணிநீக்கம்.. பீதியில் ஊழியர்கள்.. அடுத்த என்ன நடக்கும்..?!

2024 புத்தாண்டு துவங்கி முழுசா 25 நாள் முடிவதற்குள் சுமார் 11000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தச் செய்தி டெக் மற்றும் ஐடி சேவை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதைத் தாண்டி பீதி அடையவைத்துள்ளது.
டெக் துறையில் பல வருடமாகப் பேசப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், NLP, பிக் டேட்டா போன்றவை தற்போது அனைத்து துறையினராலும், அனைத்து நிறுவனங்களாலும் பயன்படுத்தும் நிலைக்கு மாறியிருக்கும் காரணத்தால் பல பணிகள் ஆட்டோமேட் செய்யப்பட்டு ஊழியர்கள் தேவை குறைந்து வருகிறது. இதோடு உலகளவில் பொருட்களுக்கும், சேவைகளுக்குமான தேவை மக்கள் மத்தியில் பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதனால் 2023க்கு பின்பும் 2024 ஆண்டில் டெக் பணிநீக்கம் அதிகமாக உள்ளது, இதில் முக்கியமாகக் கடந்த 24 மணிநேரத்தில் 3 முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு மாத சம்பளக்காரர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
eBay பணிநீக்கம்: உலகளவில் பிரபலமாக இருக்கும் ஈகாமர்ஸ் வர்த்தகத் தளமான ஈபே சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்தப் பணிநீக்கத்தின் மூலம், ஈபே நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் பட்டியலில் சுமார் 9 சதவீத ஊழியர்கள் நீக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஈபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Jamie Iannone கூறுகையில் எங்களுடைய மொத்த வர்த்தகத்தைக் காட்டிலும் ஊழியர்கள் மற்றும் செலவுகள் அதிகமாக உள்ளது.